Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

வாழ்வதற்கான உரிமையை தரமறுக்கும் அரசு, ஆள்வதற்கான உரிமையை தருமா..?

Thursday, June 200 comments





இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என ப‌ெ‌யர் சூட்டப்பட்ட நாடு ஆகும். ஆனால் நாட்டின் அரசியல் வரலாற்றில் சர்வதிகாரம் மற்றும் இனவாத ஆட்சி முறைமையே மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றதது. அந்த வகையில் இது எமது நாடு என்பதற்கு பதிலாக இது ஒரு பௌத்த நாடு என்றும் பௌத்த மதத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் கூறப்படுகின்றது. மேலும் இதற்கு சான்று பகிரும் நிகழ்வுகளாக
 

* 1956ம் ஆண்டில் SWRT பண்டாரநாயக்க அரசால் முதல் முதலாக சிங்கள மொழிச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தமிழ் மொழி சட்ட உரிமை மறுக்கப்பட்டு இரண்டாம் தர மொழியாக ஒதுக்கப்பட்டது. இதனால் தமிழ் பேசும் மக்கள் கல்வி மற்றும் தொழில் வாய்புகளில் வலுக்கட்டாயமாக சிங்கள மொழி உள்வாங்கவும் நடைமுறைபடுத்தவும் பனிக்கப்பட்டது.


*1948ம் ஆண்டில் குடியுரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டதனால் ஒரே இரவில் இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் தமது குடியுரிமையை இழந்தனர். இதனை DS சேனநாயக்கா நடைமுறைப்படித்தினார் இதனால் 9 லட்சம் தமிழர்களின் குடியுரிமை பரிக்கப்பட்டது.


* 1970ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் என்ற கொடிய புதிய திட்டம் பல்க‌ல‌ை‌க்கழக அனுமதியில் தமிழ் பேசும் மாணவர்களின் உரிமையை பறித்தெடுத்து அரசில் யாப்பினுிடே உரிமை பறிப்பு அரங்கேறியது.


*1974ம் ஆண்டில் 4 வது உலக தமிழராட்சி மாநாடு உரிய அனுமதியோடு யாழ்ப்பாணத்தில் அரங்கேரிய போது தமிழர் எழுச்சியை தாங்கி கொள்ள முடியாத சிங்களம் தமிழ் மக்களின் உயிர்களை கொன்று குவித்தது.



*1981ம் ஆண்டில் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கு பதிலாக அறிவு பசியை தீர்க்கவேண்டும் என்பதற்காக வேண்டி வரிய மக்களின் நன்கொடையின் மூலம் கட்டப்பட்ட யாழ் நுிலகம் பேரினவாதிகளினால் தீக்கிரையாக்கப்பட்டது.இதனால் 97ஆயிரம் நுில்கள் எரிந்து சாம்பலாகியது.
 

*1978,1981,1983 என தொடர்ந்து வந்த இனக்கலவரம் மற்றும் வெளிகக்டை சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைகள் போன்ற உரிமை மீறல்களும் இடம் பெற்றன எனவே இப்படியான நடவடிக்கைகள்தான் இலங்கையில் பயங்கரவாதத்தை ஈன்றெடுத்தது.என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


மேலும் பயங்கரவாதத்தின் தோற்றத்தை பற்றி ஒரு சிறந்த உதாரணத்தோடு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.


அந்த வகையில் எமது நாடு 1948-02-04ம் திகதி சுதந்திரமடைந்தது இப்போது சுதந்திரம் என்றால் என்ன சுதந்திரம் எமது நாட்டிற்கு ஏன் ஒரு தேவையாக இருந்தது என்பதனை சுதந்திரத்திற்கு முன் பின் என பிரித்து ஆய்வு செய்வதன் மூலம் அதற்கான காரணங்களை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
 

எனவே சுதந்திரத்திற்கு முன் நாடு எப்படி இருந்தது?


1) நாடு - ஆங்கிலம் 2) தேசிய அரச மொழி - ஆங்கிலம் 3) தேசிய இனம் - ஆங்கிலம் 4) அரசியல் அதிகாரம் - ஆங்கிலம் 5) பதவி உயர்வு - ஆங்கிலம் 6) முப்படை அதிகாரம் - ஆங்கிலம் 7) கலை,கலாச்சாரம் - ஆங்கிலம் இப்படியான முறைமைகள் இலங்கையில் வாழுகின்ற பெரும்பான்மை சிங்களம் மற்றும் சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமானதாக இல்லை என்பதற்காகவே எமது நாட்டிற்கு சுதந்திரம் ஒரு தேவயைாக இருந்தது.
 

ஆனால் சுதந்திரத்திற்கு பின் எப்படி இருக்க வேண்டிய நாடு எப்படி இருக்கின்றது?


1)நாடு - பெத்தநாடு 2) தேசிய அரச மொழி - சிங்களம் 3) தேசிய இனம் - சிங்களம் 4) அரசியல் அதிகாரம் - சிங்களம் 5) பதவி உயர்வு - சிங்களம் 6) முப்படை அதிகாரம் - சிங்களம் 7) கலை,கலாச்சாரத்திற்கான முக்கியத்துவம் - சிங்களம்

ஆகவே என் இனிய உறவுகளே புலிகளை பயங்கரவாதி என்று குற்றம் கூறுவது நியாயமாக இருந்தாலும் கூட யார் பயங்கரவாதத்தை ஈன்றெதடுத்தவர்கள் என்பதை மேலே கூறப்பட்டிருக்கின்ற விடயங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள் அத்தோடு சிறுபான்மை மக்கள் இலங்கையில் வாழ்வதற்கு என்ன உரிமை இருக்கின்றது என்பதனைப் பற்றியும் கொஞ்ஞம் சிந்தித்து பாருங்கள்.

இதனைத் தொடர்ந்து சிரு பான்மை மக்கள் தற்பொழுது வாழ்வியலுக்கான உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மாகாணத்திற்குண்டான அதிகாரத்தை கோருகின்றனர்.
 

எனவே மாகாணசபை எப்போது மற்றும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?
 

இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாக்கும் இடையே 1987-07-29ம் திகதி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும்.இதனை இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ம் திருத்தம் மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி அறிவித்தது.

இதன் பின்னர் 1988-02-03ம் திகதி 9 மாகாணசபைகள் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து சிறுபான்மை மக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை தவிர்துக் கொள்வதற்காக வேண்டி வடகிழக்கு மாகான சபைகள் 1988-09-02ம் திகதி இணைக்கப்பட்டது. இதற்கு பிற்பாடு வடகிழக்கு மாகாண இணைப்புக்கெதிராக மக்கள் விடுதலை முன்னனி கிழக்கிற்கு தனி மாகாணம் அமைய வேண்டும் என்பதற்காக 2006-07-14ம் திகதி உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து வடகிழக்கு இணைப்பு சட்டவிரோதம் என 2006-10-16ம்திகதி நீதி மன்றம் தீர்பளித்தது. இதனையடுத்து 2007-01-01ல் வடகழக்கு இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.


மாகாண ச‌பை உருவாக்கப்பட்டதற்கான நோக்கம்தான் என்ன?
 

இலங்கை நாடானது பல்லின,பல்மத மக்கள் வாழும் நாடு என்பதனை உணர்ந்து தனித்தனி கலாச்சாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதனையும் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று புர்வமான வசிப்பிடங்கள் என்பதனை அங்கிகரித்து சகல பிரஜைகளும் சமத்துவமாகவும்,பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் உரிமை உண்டு என்பதனை அங்கிகரிப்பதுடன் ஐக்கிய இறைமையை பேனி பாதுகாப்பதற்கான அதிகாரபகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தலைப்பை மையமாக வைத்தே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டது என்பதனை பேரினவாத அமைப்புகள் மற்றும் அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் மாகாண சபைக்கு உண்டான அதிகாரங்களை அரசாங்கம் வழங்குவதன் ஊடாகவே இலங்கையில் சிறுபான்மை சமூகம் ‌ஐக்கியத்துடன் வாழ்வதற்கான உரிமையை உறுபடுத்திக்கொள்ள முடியும் என்பதனை சிறுபான்மை மக்கள் உணர்ந்து கொள்ளவதுடன் தொடர்ந்தும் சுயநல பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி அடிபனிந்து, தலைகுனிந்து வாய்மூடிமௌனமாக  எம் சமூகத்தை அடகு வைக்கும் இழிவான சாதியாக துரோகிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஓர் சிறந்த பாடத்தை கற்பிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கிருக்கின்றது என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே என் அன்பான உறவுகளே விடியாத இரவு என்று ஒன்றில்லை நாளை முடிவாகும் எமது ஊர் தொல்லை இங்கு தடையாக எவர் வந்தாலும் அகிம்சை படையாக காற்றைப்போல் நாம் ஒன்றாய் நின்றுபோராடுவோம் வாருங்கள்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by