இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்கும் வகையில் நியாயமான தீர்வு வழங்காமல்
நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இனங்களுக்கு இடையில் சந்தேகம், அவநம்பிக்கை என்பவற்றை வளர்த்து அதற்கு தீர்வு வழங்காதிருந்தால் அது பாரிய பிரச்சினை வரை கொண்டு சேர்க்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அடிப்படைவாத மந்தபுத்தியுடைய சிலரால் நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாதுள்ளதாகவும் சிங்கள இனத்தின் பெயரை விற்கும் தேசத்துரோகிகள் சிலரால் இந்நிலை ஏற்பட்டுள்ளதென மங்கள சமரவீர தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிரபலங்கள் எனக் கூறப்படும் சிலர் 13ம் திருத்தத்தை அழிக்க தயாராவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பாலானோர் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு எனவும் அரசாங்க அமைச்சர்கள் இதனை தன்னிடம் கூறியுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதனால் 13ம் திருத்தச் சட்டத்தில் கை வைப்பதை அரசாங்கம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)

Post a Comment