பாரம்பரிய காணி உரிமை இருந்தும்கூட தமது வாழ்விடங்களிலிருந்து
வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள முஸ்லிம்களின் நலனுக்காக
வாதிடுவதற்கு 2 ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட பிரபல்யமான சட்டத்தரணிகள்
முன்வந்துள்ளனர்.
காலி - கராப்பிட்டியாவில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் நிலையை
கண்டறிவதற்காக சில சட்டத்தரணிகள் அங்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டுள்ள
அதேவேளை பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் சிலரை உடனடியாக கொழும்புக்கு
வரும்படியும் சில சட்டத்தரணிகள் அழைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து உரிய ஆதாரங்கள் கிடைத்தவுடன், அவர்கள்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்
செய்யப்படவுள்ளதாகவும் அறியவருகிறது.
Post a Comment