
நேற்று குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் இதற்கான அனுமதியை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த 3நாள் தடுப்புக்காவல் அனுமதியினை கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் முஹம்மத் சஹாப்தீன் வழங்கியுள்ளார்.குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாணி அபேசேகர முன்வைத்த குறித்த தடுப்புக்காவல் உத்தரவு கோரிக்கைக்கே நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 7 சந்தேக நபர்களில் 5 பொலிசாரும் அடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பொலிஸ் தகவல்களின் படி பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன தொடர்பிலான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போது தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்களன்று இரவு 9.30 கைதுசெய்யப்பட்ட கொழும்பு வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் புலனாய்வுப்பிரிவினரின் விசாரணையின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 வயதான முஸ்லிம் வர்த்தகரை கடத்திச் சென்று கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சில பொலிசாரிடம் விசாரணைகளை செய்ய குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment