செயலாளர்கள் என்பவர்கள் அரசியல் செய்ய வரக்கூடாது அவர்கள் அவர்களுடைய வேலையைத்தான் செய்யவேண்டும். இன்று செயலாளர்கள் அரசியல் செய்ய வந்ததனால் தான் இன்று எமது நாட்டிலே தற்போது சூடு பிடித்துள்ள 13 ஆம் திருத்தச் சட்டத்தின் எதர்காலம் குறித்த கேள்வியாகும். இந்தக் கேள்வியைப் பற்றித்தான் இங்கு நிறையப்பேர் இங்கு பிரஸ்தாபித்தனர்.
13 ஆம் சீர்திருத்தச் சட்டம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு குழந்தையாக பிரஸ்தாபித்துள்ளது என்பது அது மிகையாகாது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழு ஏற்பாட்டில் முப்பெரு விழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை (22) இரவு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மத்திய குழுவின் தலைவர் ஐ.எல்.சுலைமைலெப்பை தலைமையில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் விளைவுதான் இந்த 13 ஆம் சீர்திருத்தச் சட்டமாகும். அதில் ஒன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். இந்த மாகாண சபை முறைமையை ஆரம்பத்தில் வித்துட்டதில் ஒன்று இந்த முஸ்லிம் காங்கிரஸாகும். இதில் போட்டியிட்டவர்கள் எல்லோரும் நகல் உறுப்பினர்கள்.
இது அவ்வாறில்லாமல் இந்த மாகாண சபைத் தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு வந்தவன் நான் என்றும் எனக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப்பற்றி நன்கு தெரியும் அதைப்பற்றி இங்கு யாரும் எனக்கு சொல்லித்தரத் தேவையில்லை. என்று அமைச்சர் அதாஉல்லா அமைச்சரவைக் கூட்டத்தல் கூறினார்.
அதாஉல்லா அமைச்சர் எப்போது எரியிர வீட்டில் ஏதாச்சும் பிடுங்கிச் செல்லாம் என்ற முயற்சியில் காத்துக்கொண்டு இருப்பவர்தானே அதனால் ஜனாதிபதி சொல்லுவதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு மாகாண சபையின் அதிகாராங்களை பிடுங்கி கொடுக்கும் முயற்சியில் அன்று கூறும்போது எனது வாய்துள்ளியது இருந்தும் கூட அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதாஉல்லா அவமானப்பட்டு விடுவார் என்று நான் ஒன்றும்பேசவில்லை.
மாகாண சபைத் தேர்தலில் இந்த முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று வென்றுகாட்டிய ஒரு சாதனை படைத்துக் காட்டியிள்ளது. இதற்கு மக்கள் பலத்த ஆதரவை தந்துள்ளதால் இக்கட்சி மக்கள் களத்தில் உள்ளதை யாரும் அசைக்கமுடியாது. இந்தக் கட்சி இன்று அரசாங்கத்தை விட்டு பிரிந்து சென்று விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
கடந்த மாகாண சபை தேர்தல் முடிந்தவுடனே கட்சித் தொண்டர்கள் பாரிய எதிர்பார்ப்புடன் மிக அவசரப் புத்தியில் அன்று இருந்தார்கள். ஆனால் கட்சி அதற்கான ஒரு சனக்கியமான முடிவினை எடுத்ததற்கு கட்சித் தொண்டர்கள் ஆதரவாக செயற்பட்டார்கள்.
இதேபோல் பொதுமக்களும் மு.கா. அரசாங்கத்தை விட்டு விலகிவிடும் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்காலத்தை உணர்ந்த கட்சியின் தலைமைப்பீடம் இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது.
அன்று இதை விளங்கிக் கொள்ளாத தமிழ் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை தார்மாறாக தூற்றியது. அதனைக்கூட பொறுப்படுத்தாத முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரசுடன் இருக்கும் இந்த சூழலில் அமைச்சரவையிலும் அரசாங்கத்துடனும் விவாதிக்க முடிகிறது.
அன்று முஸ்லிம் காங்கிரஸ் இதனை உணர்ந்து செயற்பட்ட விடயத்தை தற்போது கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட தமிழ் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் இன்று முஸ்லிம் காங்கிரஸையும், தலைமைத்துவத்தின் செயற்பாடுகளையும் பற்றி பாராட்டுகிறனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினரின் விடயத்தில் மிக விழிப்பாகவே இருக்கும். அதற்காக முதலில் நாங்கள் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். அரசியலிலுள்ள சில சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்பட எத்தனிக்கும்போது அதற்கும் ஆதரவாளிக்கலாம்.
இன்னும் சிலர் மௌனமாக இருக்கலாம். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் சிறுபான்மை இனத்துக்கு அனியாயங்கள் இழைக்கப்படுகின்றபோது ஒருபோதும் மௌனமாக இருக்காது அது அதன் இயல்பான அரசியலையே செய்துகொண்டு போகும்.
வட கிழக்கு முஸ்லிம்களை பாதுகாக்க செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் புலன்பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட வேண்டும்.
13 ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும் திருத்தங்களை கொண்டு வர முற்பட்டாலும் அந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும். பின்னர் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும். போன்ற நடைமுறைகள் இருக்கிறன. இது நடக்கப்போகும் காரியம் இல்லை.
முஸ்லிம்களின் அதிக பெரும்பான்மையை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களுடன் இருக்கின்றது என்பதை நினைத்து ஜனாதிபதி பெருமைப்பட வேண்டுமேயன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சிறுமைப்படுத்த எத்தனிக்கக் கூடாது. நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு உள்ள நம்பகத்தன்மையை குறைந்தபட்சம் முஸ்லிம் காங்கிரசை இணைத்தாவது பெற்றிருக்கலாம்.
அல்லது இனியாவது இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த தெரிவுக் குழுவின் யோசனைகளை குப்பையில்தான் போட வேண்டிய நிலை உருவாகும்.
13 ஆம் திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு ஒரு தெரிவுக் குழுவை நியமித்துள்ளது. இது பாரதுரமான ஒரு விடயமாகும். அது அரசியல் சாதுரியமும் அல்ல. பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அடியாகும்.
ஒரு பழமொழி ஒன்று எனது ஞாபகத்துக்கு வருகின்றது அது என்னவென்றால் 'பொறக்கக்கொள்ள முடம் அது பேய்க்கு பார்த்தால் சரி வருமா? அதுபோல்தான் இந்த 13 ஆம் சீர் திருத்தச் சட்டமாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் கால காலமாக எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்துள்ளது. அது பிறக்கும்போதே ஊனமாக பிறந்துள்ளது. அதை நாம் தூக்கி வீசிவிட முடியுமா? இல்லை அது எமது பிள்ளை. அதை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.
ஜனாதிபதியின் செயலாளர் றுவிட்டர் சட்செய்துள்ளார். அதன் மூலம் இப்போது உரையாடலாம். அதனை ஜனாதிபதியின் செயலாளர் செய்துள்ளார். அதற்கு அவர் சொல்லும் பதிலில் ஒன்றுதான் இந்த 13 ஆம் சட்டத்திருத்தம் தேவையில்லை.
அது வெள்ளை யானை அதை விட்டுப்போட்டு உள்ளுராட்சிக்கு அதிகாரங்களை கொடுத்தால் போதும் என றுவிட்டர் மூலம் சட்செய்து உரையாடியுள்ளார். செயலாளர்கள் என்பவர்கள் அரசியல் பேசுவது இது என்னுடைய பார்வையில் நல்ல விடயம் இல்லை. அதை பாதுகாப்புச் செயலாளரும் செய்கின்றார். அது என்னுடைய பார்வையில் ஆகாத விசயமாகும்.
முன்னாள் பிரேமதாஸா ஜனாதிபதியின் செயலாளர் கே.ஜே.விஜயதாஸ என்பவர் இருந்தார். அவரின் செயல்கள் எவ்வாறு காணப்பட்டது என்றால் நானும் தலைவரும் ஜனாதிபதியை சந்திக்போகும் போதெல்லாம் அவர் ஜனாதிபதிக்கு அருகில் இருந்து கொள்வார்.
அப்போதும் கூட அவர் ஒரு வார்த்தையும் பேசமாட்டார். பிரேமதாஸா ஜனாதிபதி சொல்வார் விஜய் இதை குறித்துக்கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்லும் போதெல்லாம் அவர் எதுவுமே பேசமால் குறித்துக்கொள்வார்.
பிரேமதாஸ ஜனாதிபதி நேரத்துக்கு செயல்படும் ஒருவராவர். அவருடன் செயற்பட்டவர்தான் கே.ஜே.விஜயதாஸ ஜனாதிபதி பிரேமதாஸா மரணித்ததன் பிறகுதான் தெரியும் கே.ஜே.விஜயதாஸ என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்ற விசயம் எனக்கு தெரியவந்தது.
விஜயதாஸ என்பவர் எத்தனையோ கட்டுரைகளை எழுதியிருந்தார். அவர் ஒரு தேசியவாதி போக்குடையவர் என்பது அவர் ஒரு பெரும் தேசியவாதி என்பது பற்றி அப்போது தெரியாது. ஆந்தளவுக்கு அவரின் செயற்பாடுகள் இருந்தது.
ஜனாதிபதி பிரேமதாஸா எதைச் சொல்கின்றாறோ அதைமட்டும் தான் அவர் செய்துகொள்வார். இடையில் புகுந்துகொண்டு கருத்துச் சொல்வது பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது என்ற விசயத்தை அவரின் வாழ்நாளில் ஒரு நாள் கூட அவர் செய்தது கிடையாது. அதைத்தான் ஜனாதிபதியின் செயலாளர் செய்து கொள்ளவேண்டிய வேலையாகும்.
ஜனாதிபதியின் செயலாளர் என்பவர் இந்த நாட்டின் பொது நிருவாக சேவையின் தலைவராக கணிக்கப்படுபவர். அவ்வாறானவர்கள் அரசியல் செய்யக்கூடாது. இப்படிச் செய்பவர்களைப்பற்றி நான் விசனப்படுகின்றேன். இன்று நான் இதைப்பற்றி பேசியதை என்னுடன் கோபித்துக் கொள்வார்கள். அதைப்பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்.
பாதுகாப்புச் செயலாளரும் ஒரு பிழையை விட்டார் அதையும் நான் ஜனாதிபதியுடன் சுட்டிக்காட்டினேன். இந்தப் பிழைகள் நடக்கின்றபோது அதை சுட்டிக்காட்டுவதும் நீதி அமைச்சின் வேலையாகும். அதைத்தான் நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
இந்த 13 ஆம் சட்டத்திருத்தம் காணி, பொலிஸ் அதிகாரங்களை மட்டுமல்ல எல்லா அதிகாரங்களையும் பிடுங்கும் ஒரு முயற்சியாகும். அதைப்பற்றி நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.
அதுவிடயத்தில் ஜனாதிபதி என்னுடன் பாய்ந்தார் இதற்கெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் பயந்து கொள்ளப்போவதில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் சரியான இடத்தில் சரியானதை மட்டும்தான் சொல்லும், செய்யும் அதுதான் முஸ்லிம் காங்கிரஸின் வேலையாகும்.
இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைச்சர் உறுப்பினர்களை கூப்பிட்டு எல்லா விடயங்களையும் பற்றி நன்கு தெளிவாக சொல்லியிருக்கின்றேன். அது மட்டுமல்ல முதலமைச்சரிடமும் சொல்லியிருக்கின்றேன். என்றும் அவர் அங்கு மேலும் கூறினார்

Post a Comment