Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மு.கா. தெரிவுக்குழுவில் நிராகரிப்பு;வெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - அசாத்சாலி

Sunday, June 230 comments


முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியது முஸ்லிம் காங்கிரஸ். அதற்கு பரிசாகவே அரசியல் அமைப்புத்திருத்தம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸை நிராகரித்துள்ளது. எனவே வெட்கமிருந்தால் இவர்கள் அமைச்சுப்பதவிகளை துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத்சாலி.

அரசியல் அமைப்பின் திருத்தம் தொடர்பாக ஆராயும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அறவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தலைமையிலான 19 பேர் கொண்ட இக்குழுவில் அரசின் பங்காளி கட்சிகளை சேர்ந்தவர்களான விமல்வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, தினேஸ்குணவர்தன, டியு குணசேகர, வாசுதேவ நாணயக்கார, முத்துசிவலிங்கம், டக்ளஸ் தேவானந்தா, ரிசாத்பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எவரும் உள்வாங்கப்படவில்லை.

இவ்வாறு அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பலர் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அவ்வாறான ஒரு அரசாங்கத்துடன் இவர்கள் ஏன் இணைந்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகங்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லாமலேயே செயற்படுகின்றது. அதற்கு சிறுபான்மை கட்சிகளை சேர்ந்தவர்களும் துணையாக இருப்பதுதான் கவலையளிக்கின்றது. அரசாங்கம் சிறுபான்மையிருக்கு அசாதாரணமிழைக்கிறது என்ற காரணத்தினாலேயே நாம் அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு வெளியேறினோம்.

இன்று பலர் பதவிகளுக்காகவும் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தமக்கு வாக்களித்த மக்களை காட்டிக்கொடுத்து அரசாங்கத்துடன் இணைந்து சுகபோகங்களை அனுபவித்து வருகிறார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அரசாங்கம் தமது தேவைகளை சாதுர்யமாக அரங்கேற்றி வருகிறது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணை போகாமல் தமிழ், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டும் நாட்டின் ஜனநாயகத்தினை கருத்திற்கொண்டும் சிறுபான்மையினத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by