13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு
சிறிலங்கா அரசு தலைப்படுமானால் பொதுநலவாய மாநாட்டினைப் பகிஷ்கரிக்க இந்தியா
உத்தேசித்திருப்பதாக நம்பகமாக அறியமுடிகின்றது
இந்தியாவின் இந்த நிலைப்பாடு இராஜதந்திர ரீதியாக கொழும்புக்கு அறிவிக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா - இந்திய ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதாலும், அதனை மீறும் வகையில் சிறிலங்கா செயற்பட்டால் அது இந்தியாவின் தன்மானத்துக்கே சவால் விடும் வகையில் அமைந்துவிடும் என்பதாலும், இது விடயத்தில் இந்திய காங்கிரஸ் அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா பகிஷ்கரித்தால் அது சர்வதேச ரீதியில் சிறிலங்காவுக்கு அவப்பெயரை தந்துவிடும்.
எனவே பொதுநலவாய மாநாடு மற்றும் தமிழீழத்தில் நடத்தவுள்ள தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசமைப்புத் திருத்தங்களைச் செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு மூத்த இராஜதந்திரிகள் பலர் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இந்திய புறக்கணிக்கும் பட்சத்தில், வேறும் பல நாடுகள் புறக்கணிக்க ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment