கிழக்கு மாகாண சபை மக்களின் நன்மை கருதி பொது மக்கள் முறைப்பாட்டுக் குழு
ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மாகாண சபை உறுப்பினர்
டபிள்யு. ஜீ. எம். ஆரியவதி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.தண்டாயுதபாணி, எம்.எஸ்.உதுமாலெவ்லை,
ஏ.எம்.ஜெமீல், என்.ஜி.எம். ஜயந்த விஜேசேகர, ஆரிப் சம்சுதீன், ரி.
நவரெட்னராஜா, ஏ.எல்.எம்.நஸீர், ரி.கலையரசன் மற்றும் இ.துரைரெட்ணம் ஆகியோர்
ஏனைய உறுப்பினர்களாவர்.
பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை பிரதேச சபைகளில் வைக்கப்பட்டிருக்கும்
பொது மக்கள் முறைப்பாட்டுப் பெட்டியினுள் இடுவதன் மூலம் அல்லது தலைவர்,
பொது மக்கள் முறைப்பாட்டுக்குழு, பேரவைச் செயலகம், உட்துறைமுக வீதி,
திருகோணமலை எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புவதன் மூலம் அல்லது
மாகாண சபை உறுப்பினர்களுக்கு நேரடியாக கையளிப்பதன் மூலம் தமது
முறைப்பாட்டினைத் தெரிவிக்கலாம்.
Post a Comment