
உம்ரா விசா காலாவதியாகும் காலத்தை 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி
அரசு தீர்மானித்துள்ளது. மக்கா பெரிய பள்ளிவாசலின் புனரமைப்பு பணிகள்
தொடர்வதாலேயே இந்த கட்டுப்பாட்டினை விதிக்க சவூதி ஹஜ் அமைச்சு
தீர்மானித்துள்ளது.
இதன் படி புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு
வருகின்றது.இதற்கான சுற்று நிருபம் ஏற்கனவே சவூதி அரசினால் வெளிநாட்டு
முகவர் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் சவூதி அரசின் இந்த முடிவானது உம்ரா கடமையினை நிறைவேற்ற நிறைவேற்ற எதிர்பார்த் த பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சவூதியின் புதிய சுற்று நிருபத்தின் பிரகாரம் உம்ராவுக்கு செல்லும்
யாத்திரிகர்கள் உம்ரா விசா பதியப்பட்டு 14 நாட்களுக்குள் அக்கடமையினை
நிறைவேற்றவேண்டும் எனவும் அத்துடன் யாத்திரிகர்கள் சவூதிக்குள் வந்து 14
நாட்களில் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment