
இன்றைய தினம் பதுளையில் நடைபெறவுள்ள பொது
பல சேனாவின் பொதுக்கூட்டம் சம்பந்தமாக பதுளை முஸ்லிம்களின் நிலைமைகள்
குறித்து மேற்கொள்ளப் படவேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக பதுளை ஜும்மா பள்ளி
நிர்வாகத்தால் நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்மவிற்கு பின் ஏற்பாடு செய்யப்பட
கூட்டத்தில் உரை நிகழ்த்திய பதுளை போலிஸ் நிலைய ஏ எஸ் பி திரு ஈ பி
திலகரத்னா, அவர்கள் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் “பொது பல சேனாவினர்
தீவிர வாதிகள் அல்ல.நான் அவர்களுடனும் இதுபற்றி கதைத்துள்ளேன் .
அவர்கள் சமூக ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படாது
என்று உறுதியளித்துள்ளார்கள் , தீவிரவாத கொள்கையுடையவர்கள் எல்லா
சமூகங்களிலும் உள்ளனர், ஆனால் அவர்கள் மிகச்சிலரே. ஆனால் அவர்களுக்கு சமூக
ஒற்றுமையை சீர்குலைக்க நாங்கள் விடமாட்டோம். பதுளை முஸ்லிம்களுக்கு இன்று
ஏற்பட்டுள்ள பயமானது , ஒருவன் பாம்பு புற்றை கண்ட பயமே.
பாம்பு புற்றை கண்டதும் சிலருக்கு பயம்
வந்து விடும் , அதில் பாம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பயந்து
விடுவார்கள் , அதற்கு சிங்களத்தில் சொல்வார்கள், “ ஹும்பஸ் பய ” என்று,
நாளைய கூட்டம் அவர்கள் அவர்களின் பாட்டில் செய்வார்கள் , நீங்கள் உங்கள்
வேலைகளை செய்துகொண்டு போங்கள், பாதுகாப்பு விடயமாக நாங்கள் கவனித்து
கொளவோம் .ஆனால் நான் இவ்விடத்தில் உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை விடுக்க
விரும்புகின்றேன் , அதாவது நாளை இறைச்சி கடைகளை மூடிவையுங்கள். அது தவிர
ஏனைய விடயங்கள் வழமைபோல நடைபெறலாம்”. என்றும் தெரிவித்தார். குழப்ப நிலையை
ஏற்படுத்தும் நோக்கில் தூண்டிவிடுபவர்கள் பற்றி இந்த சமூகத்திலிருந்து
எவரையாவது நீங்கள் கண்டால் உடனடியாக எங்களுக்கு அறிவித்து விடுங்கள் ,அவர்
விடயத்தில் நாங்கள் கவனித்து கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment