
13 ஆவது திருத்தத்தில் கைவைப்பதற்கு நாட்டில் எவருக்கும் நாம் இடமளியோம். அதனை பாதுகாப்பதற்காக நான் எனது பதவியையும் இழக்கத் தயார் என மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித செனரத்ன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தம் தொடர்பில் நான் ஆரம்பத்தில் இருந்து எனது கொள்கையில் மாறவில்லை. அதற்கு எதிராக செயற்பட்டுவரும் இனவாதிகளின் செயற்பாட்டுக்கு நான் எதிர்;ப்புத் தெரிவிக்கின்றேன். 13 ஆவது திருத்தம் தொடர்பில் கைவைப்பதற்கு எவ்விதத்திலும் நாம் இடமளியோம்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமை கொடுக்கப்பட்டால் ஈழம் உருவாகுமென பேசுபவர்கள் தற்போது தங்களை மாகாண சபைகளின் ஆட்சியை தீர்மானிக்கும் ரிமோட்கொண்ட்றோல் என சொல்லுகின்றனர்.
மாகாண சபை முறைமையின் கீழ்; தமது வாழ்வாதாரத்தையும் அதன் சுகபோகத்தையும் அனுபவிப்பவர்கள் அதனை தமிழ் மக்களுக்கு வழங்கும் போது அகற்கு எதிராக கூக்குரல் இடுவதேன்.
இவ்வாறு பிரிவினைவாதம் பேசும் சிங்கள இனவாதிகளால் தான் தமிழ் இனவாதிகள் தோற்றம் பெற்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment