“நாங்கள்
இனவாதிகள் என்பது உன்மைதான். நாங்கள் மத தீவிரவாதிகள் என்பதும் உன்மைதான்.
இருந்தபோதிலும், நாங்கள்தான் இவற்றின் மூல கர்த்தாக்களாக இந்நாட்டில்
இருக்கவில்லை” என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித்த தேரர்
தெரிவித்துள்ளார்.
இந்நாட்டை
ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றமுடியுமா என்பதில் எமக்கு சந்தேகமே உள்ளது. அது
ஏற்கனவே குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் மேலும்
தெரிவித்தார்.
“இனவாத
அல்லது மத விடயங்கள் மேலெழும்போது நாங்கள் உணர்ச்சிகரமான கருத்துக்களை
சொல்லவே செய்கிறோம். நாங்கள் இதில் எல்லை கடந்திருந்தால், பாதுகாப்பு
அதிகாரிகள் எம்மை அழைத்து அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என நாம்
வேண்டிக் கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அஸாத்
ஸாலி கைது விவகாரம் தொடர்பாக, பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் கேட்ட
கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நாட்டு
சட்டங்கள் எல்லோராலும் ஏற்கக் கூடியவையே. ஆஸாத் ஸாலி மட்டுமல்ல நாட்டின்
பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு குடிமகனும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படலாம்.
ஆஸாத் ஸாலி அப்பாவியாக இருந்தால், அவர் தனது குற்றமற்ற தன்மையை நிரூபித்த
பின்னர் விடுதலையாகலாம்.
மறுதலையாக
இந்நாட்டு முஸ்லிம்கள் தாங்கள் விஷேட அந்தஸ்துள்ள குடிமக்கள் என்று
எண்ணுவார்களாயின் அவர்கள் தவறிழைக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்க
வேண்டும் எனக் கோரும் அஸாத் ஸாலியின் கூற்றுக் காரணமாகவே அவர் தற்போது
தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோன்று
பொது பல சேனா கூறியிருந்தால், அவர்களும் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கும்
எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாங்களும் உணர்ச்சிபூர்வமான
கூற்றுக்களை வெளியிடுகின்றோம். அவை தொடர்பாக அழைக்கப்பட்டு
கேள்விக்குட்படுத்தப்பட்டால், பாதுகாப்பு தரப்பினருக்கு வேண்டிய எல்லா
தகவல்களையும் நாங்கள் வழங்குவோம்.
இந்நாட்டிற்கு
போதைப் பொருட்களையும் மாத்திரைகளையும் குடும்பக் கட்டுப்பாட்டுச்
மருந்துகளையும் ஹிரோயினையும் அதிகம் கொண்டுவருவோர் யார்? ஆராய்ந்து
பார்த்தால் இவ்வாறான செயற்பாடுகளுக்குப் பின்னால் முஸ்லிம்கள் இருப்பது
தெளிவாகத் தெரியவரும். இவை தொடர்பாக நாம் பேசினால் அவர்கள்
எதிர்க்கிறார்கள்.
Post a Comment