ஜெய்லானி பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடமொன்று இன்று தொல்பொருள்
திணைக்களத்தின் உத்தரவுக்கமைய அகற்றப்பட்டதுடன் அவ்விடத்தில் தொல்பொருள்
அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பள்ளிவாசல் நிர்வாக சபையின் இணக்கப்பாட்டுடனே குறிப்பிட்ட கட்டிடம்
அகற்றப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் பள்ளிவாசல்
நிர்வாக சபைக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலே இந்த
இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
இன்று பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஏனைய கட்டிடங்களையும் அகற்றுவதற்கு
அதிகாரிகள் முயன்ற போதும் பள்ளிவாசல் நிர்வாக சபை கடும் எதிர்ப்பு
தெரிவித்ததையடுத்து அது கைவிடப்பட்டது.
இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவி ரொசானா அபுசாலி கேசரிக்கு
கருத்து தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களம் நினைத்தவாறு கட்டிடங்களை
உடைப்பதை அனுமதிக்க முடியாது. நாம் ஒரு கட்டிடத்தை அகற்றுவதற்கே இணக்கம்
தெரிவித்திருந்தோம். முஸ்லிம்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ள
வேண்டும் என்றார்.
கூரகல பிரதேசத்தில் இன்றைய அகழ்வுகளின் போது ஒருவித கருமையான மண்
கண்டுபிடிக்கப்பட்டதுடன் அம் மண் எந்தக்காலத்தைச் சேர்ந்ததென
அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டுமென தொல்பொருள் திணைக்கள
அதிகாரிகள் தெரிவித்ததாக பலாங்கொடை நகர சபை உறுப்பினர் எம்.ஜே.மலிக்ஷா
தெரிவித்தார்.
Post a Comment