கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தின் செயற்பாடுகளில் அமைச்சர்கள் உட்பட சபை உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளதுடன் மக்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ இவரால் எந்தவித நன்மையும் கிடைக்காது என்ற நிலைப்பாட்டிலும் பொம்மையான ஒரு முதலமைச்சரின் கீழ் இனியும் இருக்க முடியாது என்பதனால் புதிய ஒரு முதலமைச்சரை கொண்டு வரவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கதைகள் கசிந்துள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்படும் என்ற நிலைப்பாடு இருக்கத்தக்கதாக முன்கூட்டியே அதனை ஹாபிஸ் நஸீர் அஹமட்டிற்கு கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளில் மிகப்பலமான ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இதன் அடிப்படையில் கொழும்பின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்குக் கூட இருந்த ஆற்றலும் சமூகப்பற்றும் இப்போதைய முதலமைச்சருக்கு அறவே இல்லை என இங்கு பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

Post a Comment