Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

எனது ஆட்சிகாலத்தில் மத தீவிரவாதிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினேன்

Tuesday, May 70 comments

முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நேற்று  (05.05.2013) இரவு 10.30 – 11.30 வரை சிரச- எம்.ரீ.வி தொலைக்காட்சியில் சிங்கள மொழி மூலம் நிகழ்த்திய நேர்காணலின்போது தெரிவித்த கருத்துக்களின் சில சுருக்கம். சிரச ஊடகவியாளர் சுசில் சந்திரிகா அம்மையாரை நேர்கண்டார்.

“இந்த நாடு பௌத்த நாடு, பௌத்தர்கள் மட்டும்தான் இந்த நாட்டில் வாழுமுடியும் என சிகல உருமய கட்சியில் இருந்துகொண்டு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்து வருகின்றார்.எனது ஆட்சிக்காலத்தில் இவர்போன்ற அமைச்சர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்களென்றால் இவரை அடுத்த நிமிடமே அந்தப் பதவியில் இருந்து அகற்றி அவரை உடன் வீட்டுக்கு அனுப்பி இருப்பேன்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தினுள் அதிதீவிர மதவாதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் ஏனைய மதங்களை தாக்குவதற்கும் விமர்சனம் செய்வதற்கும் ஒருபோதும் நான் இந்த நாட்டில் இடம் கொடுக்கவில்லை.இவ்வாறன அமைப்புகளுக்கும் பௌத்த மதகுருக்களுக்கும் தற்போதைய தலைமைத்துவம் இடம் கொடுத்துள்ளது. இதனால் சிறுபான்மைச் சமுகங்களது பிரச்சினைகள் அதிகரிக்கும். இதனால் நாடு மற்றும்மொறு இனக்குரோதங்களுக்கே வழிவகுக்கும். இப்படியான அதி தீவிர பௌத்த மத போக்குடையவர்களையும் அமைப்புக்களையும் கட்டாயம் கட்டுப்படுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கொண்டுவரல் வேண்டும்.
எனது ஆட்சிக் காலத்தில் மதவாச்சியில் ஒரு கிரிஸ்த்தவ ஆலயத்தை சிங்கள அதி தீவிர போக்குடைய குழு வொன்று தாக்கினார்கள். உடனடியாக நான் பொலிசாரையும், சி.ஜ.டி யினரையும் அனுப்பி அவர்களை 24  மணித்தியாலத்திற்குள் பிடித்து சிரைப்படுத்தி அவர்கள் மீது வழக்குத் தொடங்கினேன்.
அதே போன்று மேலும் ஒரு சம்பவத்தில் இரண்டு பௌத்த மத குருமார் மத ஸ்தாணத்தை அழிக்க முற்பட்டபோது அவர்களை கைது செய்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இவற்றை ஊடகங்களுக்குச் செல்லாமால் இரகசியாகச் செயல்பட்டேன். நான் ஆட்சி செய்த யுத்தம் நடைபெற்ற காலம் மிகவும் கொடுரமான காலம், ஒருபோதும் சிறுபான்மைச் சமுகத்திற்கு எந்தவித கெடுதலும் இடம்பெறாது கண்டிப்பான உத்தரவை எனது அமைச்சர்களுக்கும் பொலிசார் சி.ஜ.டிண்க்கும் பிரப்பித்திருந்தேன்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள்தான் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், இந்த திட்டங்கள் எல்லாம் எனது காலத்தில் தான் அமுல்படுத்துவதற்கு நான் ஒப்பந்தம் செய்திருந்தேன்.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நெலும் புக்ன திட்டத்தினை நான் கொண்டுவந்தேன். அதில் பல்வேறு நாட்டியத்துறை கூடங்கள் பொதுமக்கள் சென்று கற்கக்கூடிய கூடங்கள் என பல்வேறு நிலையங்களுடன் மாநாட்டு மண்டபம் உட்படுத்தினேன். அதன் வரைபடத்தை நானே வடிவமைத்துக் கொடுத்தேன்.
தற்பொழுது அங்கு என்ன நடந்திருக்கின்றது,  அது யாருக்கும் பயன்படுகின்றதா?
எனது காலத்தில் எனது நிழற்படத்தைக் கொண்ட கட் அவுட் அல்லது போஸ்டர் அடிப்பதற்கு நான் எந்த அரசியல்வதிகளையும் விடவில்லை. ஆதனை நான் ஒருபோதும் விரும்பவும் இல்லை. எனது பெயரை சிறுபாதைக்கும் கூட பெயரிட நான் விரும்பவில்லை. இப்போது இருப்பவர்கள் எல்லாம் எல்லாவற்றுக்கும் தமது பெயரை சூட்டுகின்றார்கள். நாடு முழுவதிலும் உள்ள வீதிகளில் எல்லாம் முழுக்க தமது கட்அவுட்களையே தொங்க விடுகின்றனர்.
நான் ஒருபோதும் எனது கைப்பையில் காசு சம்பாதிக்கும் நோக்குடன் ஆட்சி செய்யவில்லை. நான் ஆட்சி செய்து ஓய்வு பெற்று எனது கேன்பேக்கை மட்டும் எடுத்துக்கொண்டு நான் பிறந்த எனது பெற்றோர்களது வீடான அத்தனக்கல்லையில் உள்ள கொரகல்லை வீட்டுக்கு வந்து குடியேறினேன். எனது பிள்ளைகளின் கல்விக்காகவும் மகளது திருமணத்திற்காகவும் வெளிநாட்டில் 2 வருடம் வாழ்ந்து வந்தேன்.
எனது ஆட்சியில் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்திருந்தால் அது மக்களுக்குச் சென்றடைய வேண்டும். அதனை மக்கள் நினைத்து கதைக்க வேண்டும். ஒரு போதும் என்ணைப் பார்த்து மக்கள் காரித் துப்பவில்லை. நான் இப்பொழு எங்கு சென்றாலும் நான் செய்த சேவைகளை நினைத்து என்னிடம் நினைவு கூறுகின்றனர். அதனையே நான் எதிர்பார்த்தேன்.
நான் ஒருபோதும் குடும்ப ஆட்சியை விரும்பவில்லை, எனது பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்துள்ளேன். எனது தந்தை பண்டாரநாயக்க தாய் சிறிமா, அண்னன் அநுரா ஆகியோருடன் எனது சேவையை இந்த நாட்டு மக்களுக்கு செய்துள்ளேன். அதே போன்று தான் எனது மகன் விமுக்தி அரசியலுக்கு வந்தால் இங்கு உள்ளவர்கள் அவனை கொலை செய்து விடுவார்கள். அவன் அரசியல் செய்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றல்ல. ஒரு அமைப்பு ரீதியாவது அவனது சேவையை மக்களுக்கு செய்ய முடியும், அவ்வாறகாக அவர்களை வளர்த்துள்ளேன்.
இந்த நாடு பௌத்த நாடு அல்ல, ஏனைய இனங்களான முஸ்லீம், தமிழ், கிரிஸ்த்துவ சமுகங்கள் வாழும் நாடு. முஸ்லீம்களுக்கு தமிழர்களுக்கும் உரிய உரிமைகளை நாம் வழங்க வேண்டும். அதற்காகவே நான் பாராளுமன்றத்தில் 13 பிளஸ், பிளசை விட மேலதிக அதிகாரங்கை கொண்டுவந்து வழங்க முற்பட்டபோது அதனை எதிர்கட்சியினர் விடவில்லை. நான் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அதிகாரங்களை அமுல்படுத்தி 1 1/2 மணித்தியாலயம் உரையாற்றினேன். எனது வாக்கைக்கூட இட எதிர்கட்சியினர் விடவில்லை. இந்த அதிகாரப் பகிர்வை என்னுடன் இருந்து செயல்படுத்தியவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அவருக்கு எல்லாம் தெரியும்.
அயல் நாடன இந்தியாவினை தற்போதைய தலைமைத்துவம் ஏமாற்றுகின்றது. இதனால் அவர்கள் நம்மை நம்புவார்களா? நான் உருவாக்கிய அரசியல்வாதிகள், பிரதியமைச்சர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் என்னுடன் பேசக்கூட பயப்படுகின்றார்கள். என்னுடன் கதைத்தால் அவர்களது பதவிகள் பறிபோகுமாம். அந்த அளவுக்கு அவர்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.
நான் அமைச்சரவையில் இருக்கும்போது பல்வேறு பட்ட விடயங்கள் திறந்த முறையில் பேசுவோம், விவாதிப்போம், அலசி ஆராய்வோம் பல தலைப்புக்களில் நிகழ்ச்சி நிரலுக்குப்பால் தமது சமுகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள அமைச்சர்கள் பேசுவார்கள். அவற்றுக்கெல்லாம் தீர்வைப் வழங்குவேன். ஆனால் இப்போது உள்ள அமைச்சர்கள் வாய் திறப்பதே இல்லையாம்.
உலகில் உள்ள அனேக தலைவர்கள் வாழ்க்கை பூராக ஆட்சிக் கதிரையில் இருந்து கொண்டு செயல்பட்டவர்களின் நிலைமைகள் என்னவாச்சு எகிப்து ஹூஸ்னி முபாரக், கேணல் கடாபி, இடிஅமீன் ஒரு போதும் நீண்ட ஆட்சி நிலைத்திருக்காது”.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by