போரின்போது இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான மிகவும் மோசமான வன்முறை தமிழ் தீவிரவாதிகளின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் போராட்டம் 2009ல் தீவிரவாதிகளை தோற்கடித்து மோசமான ஒரு முடிவுக்கு வந்ததின் பின்னர், பெரும்பான்மை இனவாத உணர்வுகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு புதிய இலக்கை கண்டுவிட்டது போலத் தெரிகிறது.
பௌத்த பிக்குகளின் அனைத்து உள்ளார்ந்த தார்மீக கட்டளைகள் அனைத்திலும் கொலை செய்யாதே என்கிற சத்தியவாக்குத்தான் முதலாவதாக வருகிறது, மற்றும் ஏனைய பெரிய மதங்கள் அனைத்தையும் விட வன்முறையற்ற கொள்கைதான் பௌத்த மதத்தின் மிகவும் விவாதிக்கத்தக்க மையக்கருத்தாக உள்ளது.
எனவே பிக்குகள் எதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசுவதுடன், கும்பல்களுடன் இணைந்து டசின் கணக்கானவர்களின் மரணத்துக்கு காரணமாகிறார்கள்.
இது இந்து சமுத்திரத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவினால் பிரிக்கப் பட்டிருக்கும் இரண்டு நாடுகளான இலங்கையிலும் மற்றும் பர்மாவிலும் நடைபெறுகிறது. அந்த இரண்டு நாடுகளில் எதுவும் இஸ்லாமிய போராளிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளாததால் இந்த நிகழ்வு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரண்டு நாட்டிலும் பொதுவாக அமைதியானவர்களாகவும் சிறியளவு சிறுபான்மை இனத்தவர்களாவே உள்ளனர்.
இலங்கையில் ஹலால் விடயம் பிரதான பிரச்சினையாக பரவிவருகிறது. பிக்குகள் தலைமைதாங்கும் பொது பல சேனா என்கிற பௌத்த படையணி நேரடி நடைவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊர்வலங்களை நடத்துவதுடன், முஸ்லிம்களின் வியாபார ஸ்தாபனங்களை புறக்கணிப்பதுடன் மற்றும் முஸ்லிம்களின் குடும்பத்தின் அளவுக்கு எதிராகவும் பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
அதேவேளை இலங்கையில் முஸ்லிம்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றாலும், பர்மாவின் நிலமை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு மத வெறுப்புணர்வை தூண்டக்கூடும் என்ற நோக்கத்தில் 2003ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அசின் விராத்து என்கிற துறவியின் தலைமையிலான 969 என்ற குழுவினரால் எதிர்ப்புகள் தலையெடுத்துள்ளன. 2012ம் ஆண்டு விடுதலையான அவர், தன்னை மாறுபட்ட ஒரு பர்மிய பின்லாடன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச்சில், மத்திய பர்மாவில் உள்ள நகரமான மெய்கிற்றிலாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்த கலவரம் ஒன்றில் குறைந்தது 40 பேராவது இறந்துள்ளார்கள். இந்த வன்முறை ஒரு நகைக்கடை ஒன்றில் வைத்து ஆரம்பமானதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் இந்த இயக்கங்கள் ஒருவகையான பொருளாதார குறைகள் என்கிற உணர்வுகள் காரணமாக பெரும்பான்மை இனத்தவர்களின் விரக்தியான அபிலாசைகளுக்கு மதச்சிறுபான்மை இனத்தவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த செவ்வாயன்று ஒரு முஸ்லிம் யுவதி தனது மிதிவண்டியால் ஒரு பௌத்த பிக்குமீது மோதியதால், பௌத்த பிக்குகள் ரங்கூன் வடக்கிலுள்ள ஒக்கானில் பள்ளிவாசல்களை தாக்கி 70க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்துள்ளார்கள். இதில் ஒருவர் இறந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்துள்ளார்கள். ஆனால் பௌத்த பிக்குகள் மதத்தின் நல்ல மனிதர்கள் என்று இதற்கு அர்த்தமா?
ஆக்கிரமிப்பு எண்ணங்கள் அனைத்து பௌத்த போதனைகளுக்கும் விரோதமானவை. அவற்றை நீக்கும் வழிமுறைகளுக்காகவே பௌத்தம் பயன்படுகிறது. தியானத்தின் வழியாக அனைத்து உயிரினங்களினதும் மீதான இரக்க உணர்வு வளரும் அதேவேளை உங்கள் உணர்வுகளுக்கும் மற்றவர்களுடையதுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்தீர ஆரம்பிக்கும்.
பௌத்த கற்பித்தல்கள் எழுத்துமூலமாக அல்லாது வாய்மொழி மூலமாகவே புத்தரின் காலந்தொட்டு பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரப்படுகிறது. புத்தரினால் வலியுறுத்தப்பட்ட தொகுப்புகளின் கூற்றுக்களில் தம்மபதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள உள்ளார்ந்த பண்பு அகிம்சைக் கோட்பாடு பற்றியதாகும்.அதன் முதல் வசனம் கற்பிப்பது ஒரு மனிதன் அவனது எண்ணங்களின் தொகைகளினாலேயே உருவாகிறான் என்று,� ஒரு மனிதன் தீய எண்ணங்களை பேசுவதாலோ அல்லது அதை பின்பற்றுவதாலோ,ஒரு வண்டியை இழுக்கும் நரியின் பாதங்களை அதன் சக்கரம் பின்தொடர்வதுபோலவே,அதன் வலியும் அவனைத் தொடர்கிறது.
பௌத்த தார்மீகத்தின் மிகவும் அடிப்படையான கோட்பாடு ஐந்து கட்டளைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது,அதற்கு துறவிகள் கீழ்படியக் கடமைப்பட்டுள்ளதுடன், அந்தத்துறையை சாராதவர்கள் அதைப் பின்பற்ற ஊக்கமளிக்கவும் வேண்டும். அதில் முதலாவது வாழும் உயிரினங்களை கொல்வதிலிருந்து விலகியிருத்தல் என்பதாகும்.
பௌத்த தியானத்தின் ஒரு நோக்கம் சகல உயிரினங்களிடத்தும் ஒரு அன்புசார்ந்த தன்மையை வழங்குவதே. தம்மபதத்தின் ஐந்தாவது வசனம் நமக்குச் சொல்வது, எந்த காலத்திலும் வெறுப்பை வெறுப்பு மூலம் தீர்க்கமுடியாது, ஆனால் வெறுப்பை அன்பினால் தீர்க்க முடியும் என்று. இது ஒரு நித்திய விதி. உண்மையில் கிறீஸ்தவ போதனைகளில்கூட ஒரு வலிமையான அமைதிவாதம் உள்ளது,�உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள் மற்றும் உங்களை துன்புறுத்துபவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்� என்கிற வார்த்தைகள் யேசுவின் மலைப் பிரசங்கத்தில் உள்ளது.
எனினும் எந்த மதமும் ஆரம்பிக்கப்பட்ட உடனேயோ அல்லது பின்னரோ அதிகாரம் வேண்டி தனது ஆன்மாவை பலிகொடுக்க தயாரான ஜேர்மன் மந்திரவாதியை போல அரசாங்க அதிகாரத்துக்கு வேண்டிய ஒரு உடன்படிக்கைக்குள் நுழைகிறது. பௌத்த துறவிகள், வன்முறையை இறுதியாக பயன்படுத்துபவர்களாகிய அரசர்களினால் மாத்திரம் வழங்கப் படக்கூடிய ஆதரவு, காப்புரிமை மற்றும் கட்டளைகள் என்பனவற்றை கவனித்தார்கள். அரசர்களும் துறவிகளுக்கு உயர்ந்த தார்மீகப் பார்வையை உறுதிப் படுத்தக்கூடிய பிரபலமான சட்டபூர்வ தன்மையை வழங்குவதை முன்னெடுத்தார்கள்.
இதன் விளைவு கடினமான ஒன்றாகத் தோன்றியது. நீங்கள் உங்கள் உலக கண்ணோட்டத்தில் தார்மீக மேன்மையை புறக்கணிக்கத்தக்க ஒரு வலிமையான உணர்வை கொண்டிருந்தால் பின்னர் அதனை பாதுகாத்து மேன்மைப்படுத்த வேண்டிய தேவைதான் எல்லாவற்றிலும் மிக முக்கியமான கடமையாக இருக்கும்.
கிறீஸ்தவ அறப்போராளிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்லது சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகளின் தலைவர்கள் ஆகிய அனைவரும் ஒரு உயர்ந்த நல்ல பெயரை பெறுவதற்காக வன்முறை அவசியம் என்பதை நியாயப்படுத்தினார்கள். பௌத்த ஆட்சியாளர்கள் மற்றும் துறவிகள் இதற்கு விதிவிலக்கில்லை.
எனவே வரலாற்று ரீதியாக பௌத்தம் என்பது கிறீஸ்தவத்தைவிட அமைதியான ஒரு மதம் எனக் குறிப்பிட்டால் அது அதிகம் இல்லை. இலங்கையின் வரலாற்றில் மிகவும் பிரபலமான ஒரு அரசன் துட்டகைமுனு, அவர் கி.பி 2ம் நூற்றாண்டில் தீவின் ஒருங்கிணைப்பு தொடர்பாக மேற்கொண்ட ஒரு வரலாற்று நிகழ்வு மகாவம்சத்தில் காணப்படுகிறது.
அவர் தனது ஈட்டியில் ஒரு பௌத்த சின்னத்தை பதித்து மற்றும் பௌத்தர்கள் அல்லாத அரசர்களுடன் போரிட தன்னுடன் 500 துறவிகளையும் அழைத்துச் சென்றார் என மகாவம்சம் கூறுகிறது. அவர் தனது எதிரிகளை அழித்தார். இரத்த ஆறு ஓடியதன் பின்னர் சில ஞ}னிகள் , �மரணித்தவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள் நீ பௌத்த விசுவாசத்தை பிரகாசப்படுத்து� எனக்கூறி அவரை சாந்தப்படுத்தினார்கள். பர்மிய ஆட்சியாளர்கள், �நியாயவாதியான அரசர்கள்� என அறியப்பட்டார்கள், உண்மையான பௌத்த கோட்பாட்டின் பெயரால் அவர்கள் யுத்தங்களை நியாயப் படுத்தினார்கள்.
ஜப்பானில் அநேக சமுராய்கள் ஜென் பௌத்த மத விசுவாசிகள், மற்றும் பல விவாதங்கள் அவர்களை சுற்றியுள்ளன � கொடூரமான குற்றம் புரிந்த ஒரு மனிதனைக் கொல்வது, ஒரு கருணைச் செயல் ஆகும், என்பது ஒரு உதாரணம். அத்தகைய காரணங்கள் ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்காக அணிதிரண்டபோது இத்தகைய காரணங்கள் உச்சம் பெற்றிருந்தன.
பிரித்தானிய சாம்ராஜ்யத்தை விரட்டியடிக்க எழுந்த தேசிய இயக்கங்களில் பௌத்தம் ஒரு முன்னணிப் பாத்திரத்தை பர்மாவிலும் மற்றும் இலங்கையிலும் வகித்தது. எப்போதாவது இது வன்முறைக்கு வித்திட்டது.1930ல் ரங்கூன் நேரடி நடவடிக்கையில் இறங்கியது, துறவிகள் நான்கு ஐரோப்பியர்களை கத்தியால் குத்தினார்கள்.
மிகவும் முக்கியமாக பௌத்தம் தங்கள் தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாக பலரும் உணரத் தொடங்கினார்கள், மற்றும் இந்த புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகளில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களின் நிலமை மிகவும் அசௌகரியமானதாக உள்ளது.
1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகல் உள்நாட்டு யுத்தமாக வெடித்தது. தமிழர் எதிர்ப்பு கலவரத்தை தொடர்ந்து தீவின் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பிரிவினைவாத குழுக்கள் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திடமிருந்து பிரிந்து செல்ல கோரிக்கை எழுப்பியது.
போரின்போது இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான மிகவும் மோசமான வன்முறை தமிழ் தீவிரவாதிகளின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் போராட்டம் 2009ல் தீவிரவாதிகளை தோற்கடித்து மோசமான ஒரு முடிவுக்கு வந்ததின் பின்னர், பெரும்பான்மை இனவாத உணர்வுகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு புதிய இலக்கை கண்டுவிட்டது போலத் தெரிகிறது.
பர்மாவில் துறவிகள் தங்கள் தார்மீக அதிகாரத்தை பயன்படுத்தி இராணுவ குழுவினருக்கு எதிராக சவால் விடுத்து ஜனநாயகத்துக்கான வாதத்தை மேற்கொண்டது 2007ல் நடந்த காவியுடைப் புரட்சிமூலம் நடைபெற்றது.இந்தமுறை பிரதான ஆயதமாக அமைதியான எதிர்ப்பு தெரிவு செய்யப்பட்டது,மற்றும் துறவிகள் தங்கள் உயிர்களை பணயம் வைத்தார்கள்.
இப்போது சில துறவிகள் தங்கள் தார்மீக அதிகாரத்தை முற்றிலும் வித்தியாசமான முடிவுக்காக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினத்தவர்களாக இருக்கலாம், ஆனால் 500,000 வரையான வலிமைமிக்க துறவிகள், அதில் ஏழ்மை மற்றும் அனாதைத்துவம் என்பனவற்றிலிருந்து தப்பிப்பதற்காக மடாலயங்களில் தங்களை வைப்புச் செய்துகொண்ட சிறுவர்களும் உட்படுகிறார்கள், முக்கியமாக கோபம் மிகுந்த இளைஞர்களின் நியாயமான பங்கும் அதில் உள்ளது.
பௌத்த தீவிரவாதிகள் மற்றும் அரசாங்க கட்சிகள் இரண்டுக்கும் இடையேயான உறவின் உண்மையான தன்மை இரண்டு நாடுகளிலும் தெளிவற்றதாகவே உள்ளது.
இலங்கையின் சக்திமிக்க பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸ, பௌத்த படையணியின் பயிற்சிப் பாடசாலையின் திறப்புவிழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் எமது நாடு, இனம்,மதம் என்பனவற்றை பாதுகாப்பவர்கள் இந்த துறவிகளே எனக் குறிப்பிட்டும் உள்ளார்.
ஆனால் முஸ்லிம் எதிர்ப்பு செய்தியானது பொதுமக்களின் ஒருபகுதினரிடம் உணர்ச்சிகரமான ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளிலும் அவர்கள் ஒரு பெரும்பான்மை இனமாக இருந்தபோதிலும், அநேக பௌத்தர்கள் தங்கள் நாடுகளில் ஒன்றுபட்டுள்ள தங்கள் மதம் நிச்சயம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை போன்ற ஒரு உணர்வை பங்கிட்டுக் கொள்கிறார்கள். உலக நிலமை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. தீவிர இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் உலகெங்கிலுமுள்ள பெரும்பான்மையான வன்முறை மோதல்களின் மையமாக இருக்கிறார்கள்.மதநம்பிக்கைகள் மூலம் மறுபிரவேசம் பெறும் மாற்று இயக்கிகள் பெறும் இறுதி முடிவாக தாங்கள் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். மற்றும் இதர மதங்கள் மிகவும் கடினமாக இருக்கப்போவதாகவும் அவர்கள் உணர்கிறார்கள்.
(அலன் ஸ்ரார்த்தன் பிராஸ்னோஸ் கல்லூரி ஒக்ஸ்போர்ட் என்பனவற்றின் வரலாற்று ஆய்வாளரும் மற்றும் 16ம் நூற்றாண்டில் இலங்கையில் பௌத்தபிரதேசங்களில் போர்த்துக்;கேயரின் ஏகாதிபத்தியம் அரசுரிமைக்கான மாற்றம், என்கிற நூலின் ஆசிரியரும் ஆவார். இந்த ஆய்வு பிபிசி சஞ்சிகையில் பிரசுரமானது) -
Post a Comment