நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தைக் கேட்டு அவசரப்பட்டு சிலர் தமது வழமையான பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
ஜனாதிபதி நல்லவர் வல்லவர் அவர் ஒரு சிறந்த
மனிதர் என்றெல்லாம் நான் கூறியதாக எனது கருத்துக்கு கண், காது, மூக்கு
எல்லாமே வைத்து அதுவும் விகாரமாக வைத்து பரப்பத் தொடங்கிவிட்டனர்.
என்னை வைத்து என் வார்த்தைகளை வைத்து
இத்தனை பேர் பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கின்றார்களா என்பதை நினைத்தால்
ஒருபுறம் சிரிப்பாகவும் இன்னொரு புறம் கவலையாகவும் உள்ளது.
எது எப்படியோ
மற்றவர்களின் குறைகளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கும் அவர்கள்
எல்லோருக்கும் இறைவன் நல்ல புத்தியையும் சமூக உணர்வையும் கொடுக்க வேண்டும்
என்று நான் பிரார்த்திக்கின்றேன்.
ஜனாதிபதியின் குடும்பத்துக்குள் பல
இனங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.இது பலருக்கு தெரியாது. அவர்கள்
எல்லோரும் அமைதியாக ஒற்றுமையாக அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களாக
தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய குடும்பப் பின்னணியைக் கொண்ட
ஒருவரால் தனது குடும்பத்துக்குள் இருக்கும் நிலையை இந்த நாட்டில் உருவாக்க
முடியாமல் இருக்கின்றதே என்ற ஆதங்கத்தை தான் நான் வெளிப்படுத்தினேன். தவிர
எனது விடுதலையின் பின் எனது குணமும் போக்கும் மாறியுள்ளதாகவும் நானும் மற்ற
அரசியல் வாதிகள் போல் ஆகிவிட்டேன் என்றும் அவசரப்பட்டு கதைகளைப் பரப்ப
வேண்டாம் என்று மிகவும் அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அஸாத் சாலி
பொது செயலாளர்
தேசிய ஐக்கிய முன்னணி
பொது செயலாளர்
தேசிய ஐக்கிய முன்னணி

Post a Comment