எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் இருந்து 10 க்கும்
மேற்பட்ட முஸ்லீம்கள் போட்டியிட உள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. இவற்றில் தேசிய கட்சிகள்,பிராந்திய கட்சிகள்,மதவாத
கட்சிகள்,சுயேட்சைக்குழுக்கள் போன்றவற்றில் இவர்கள் போட்டியிடவுள்ளனர்.
இவ்வாறு பெருமளவானோர் பல்வேறு கட்சிகளில் பிரிந்து நின்று போட்டியிடுவதனால்
யாழ் முஸ்லீம்களின் வாக்குகள் பிரிவடைந்து முஸ்லீம்களுக்கான
பிரதிநித்துவத் தொகையில் வீழ்ச்சி ஏற்படும் என அரசியல் அவதானிகள்
தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தங்கள் சுயநலனுக்காகவும், பிரசித்தமான நபராக ஏனையோர்
நம்புவதற்காகவும் பலர் போட்டியிடுவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வடமாகாண சபைக்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பித்த நிலையில் ஸ்ரீலங்கா
முஸ்லீம் காங்கிரஸ் தமது கட்சி சார்பில் போட்டியிடுவோரை தேர்ந்தெடுக்க
விண்ணப்பங்களை கோரியுள்ளது.இதர கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு,அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி,மக்கள் விடுதலை
முன்னணி,ஐக்கிய தேசிய கட்சி போன்ற முன்னணி கட்சிகளும் பல்வேறு வியூகங்களை
அமைத்து வடக்கில் அடிக்கடி முஸ்லீம் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம்
பிரதிநிதி என்று தங்களை கூறிக்கொள்வோரை சந்தித்து தாம் சார்ந்த
ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
யாழ் மாவட்டத்தினை பொறுத்தமட்டில் முஸ்லீம் மக்களின் தொகை தற்போது மிக
சொற்பமாகவே உள்ளன. காரணம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதாக கூறி
அவர்களுக்கான எதுவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமையினால் அவர்கள்
மீளவும் அகதிகளாக சென்ற இடத்திற்கு மீள சென்று விட்டனர்.
இன்று வாக்குகளை வேட்டையாட எந்த கட்சி வாக்குறுதிகளை வழங்க முன்வந்தாலும் அவர்கள் வருவதற்கு சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது.
Post a Comment