சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும்
வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
வெளியிட்டுள்ளது.
இதன்படி அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 123 புள்ளிகள் பெற்றாலும், சமீபத்தில் சர்வதேச 20 போட்டியில் விளையாடாத இந்திய அணி விகிதாச்சார புள்ளி அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
துடுப்பாட்ட தர வரிசையில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோர் முறையே நான்காம் முதல் ஆறாம் இடங்களை பிடித்துள்ளனர்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில்நரின் முதலிடத்தில் நீடிக்கிறார்.
சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) முதலிடத்திலும், ஷேன் வாட்சன் (அவுஸ்திரேலியா) இரண்டாவது இடத்திலும், யுவராஜ்சிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Post a Comment