லண்டன்: உலக
புகழ்பெற்ற செய்தி ஊடகமான பி.பி.சி. ஆங்கிலச் செய்திச் சேவை நேற்று மாலை
இலங்கையில் இடம்பெற்ற கிரான்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் செய்தியை
தலைப்பிட்டிருந்தது.
உலகில் விமானங்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் மில்லியன் கணக்கான பிரயாணிகள் இச்சம்பத்தை வாசித்து வருகின்றனர்.
பி.பி.சி.
செய்திச் சேவை உலகில் புகழ்பெற்ற ஊடகம் மாத்திரமன்றி, அனைத்து
விமானங்களிலும், நவீன புகையிரதங்களிலும் பி.பி.சி. செய்திகள்
காண்பிக்கப்படுகின்றன.
எமது
முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தூங்குகின்ற நிலைமையில் இத்தகைய வெளிநாட்டு
ஊடகங்கள் இத்தாக்குதலை தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பதானது,
இலங்கையில் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருந்துவருவதை ஆதாரபூர்வமாக நிரூபனமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் புகழபெற்ற ரயில் சேவையொன்றில் காணப்பட்ட கொழும்பு கிராண்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் செய்தியை படங்களில் காணலாம்.



Post a Comment