கொழும்பு:
பௌத்த கலகக் காரர்களின் மரணப்பிடியில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களின்
தற்போதைய நிலைமை குறித்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளிவாயல் தாக்குதல்களும்
அதற்கான போராட்டங்களும் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
அண்மைய கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல்களை இரகசிய கமெராக்கள் மூலமாக எடுத்த படத்தை உலக செய்திச் சேவைகள் இன்று தங்களது முன்பக்கங்களில் பிரசுரித்திருக்கின்றன.
இதனால்,
இலங்கையில் பள்ளிவாயல் தாக்குதல்களில் பின்நிற்பது, பௌத்த துறவிகளும், அதன்
ஆதரவாளர்களும் மற்றும் அரசாங்க பின்னணியும் என்பது தெளிவாக
எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஓர்
அரசாங்கத்தின் முழு ஆதரவுகளுடன் இடம்பெறும் இத்தகைய பள்ளிவாயல்
தாக்குதல்களை இலங்கையில் அதற்கான தீர்வுகளைப் பெறமுடியாமல் போவது
துரதிஷ்டமானதே! எனினும் இத்தகைய காட்சிகள் எமக்கான ஆவணங்களாக இருப்பது
மாத்திரமன்றி, உலக நாடுகளிடம் எமக்குள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு
ஓர் அருங்காப்பகமாகவும் அமையும்.
எனவே பௌத்த
பேரினவாதிகளால் அச்சுறுத்தல்களுக்குள்ளாக்கப்படும் பள்ளிவாயல்களுக்கு
இரகசிய கமெராக்களை பொருத்திக் கொள்ளவது சாலச் சிறந்தது.
![cctv[1]](http://yourkattankudy.files.wordpress.com/2012/10/cctv1.jpg?w=135&h=113)
Post a Comment