
கல்முனை “அரச வைத்திய உத்தியோகத்தர் சங்கம்
( G. M. O . A ) தெரிவிப்பு: அண்மையில் பதுளையில் நடைபெற்ற பொது பல
சேனாவின் கூட்ட்டத்தின் போது, கல்முனை அஷ்ரப் வைத்திய சாலை
விடயமாக ஞான சார தேரரால் முன்வைக்கப்பட குற்றச்சாட்டுகள் எந்த வித
அடிப்படையுமற்ற இனவாதத்தை தூண்டக்கூடிய அப்பட்டமான பொய்களாகும், என்று
கல்முனை “அரச வைத்திய உத்தியோகத்தர் சங்கம் (G. M. O. A ) அதன் தலைவர்
வைத்திய கலாநிதி துமிந்த பிரேமா ரத்னா அவர்களின் தலைமையில் கூடிய போது ஏக
மனதாக தெரிவித்துள்ளது.
அஷ்ரப் வைத்திய சாலையின் நிர்வாகத்தினால் ,
முஸ்லிமல்லாத வைத்தியர்கள் தாதிமார்கள் அடித்து துன்புறுத்தப்
படுவதாகவும், பார பட்சமாக நடத்தப்படுவதாகவும் , இலங்கை அரச செலவில்
கட்டப்பட்ட ஒரு வைத்திய சாலைக்கு ஒரு அரசியல் வாதியின் பெயர்
சூட்ட்பட்டிருப்பது கல்முனையில் இயங்கும் அஷ்ரப் வைத்திய சாலை மாத்திரம்
தான் என்றும் இது முஸ்லிம் தீவிர வாதிகளின் செயல் பாடு என்றும் பகிரங்கமாக
கருத்துக் கூறப்பட்டது.
மேற்படி செய்தி ஊடகங்களில் வெளியானதை
தொடர்ந்து இது பற்றி ஆராயுமுகமாக கடந்த 2013/06/19ந் திகதி வைத்தியர்களின்
தொழிற்சங்கமான “அரச வைத்திய உத்தியோகத்தர் சங்கம் (G. M. O. A ) கூடி
ஆராய்ந்துள்ளது . குறிப்பிட்ட கூட்டத்தில் கருத்துக் கூறிய அதன் தலைவர்
வைத்தியர் துமிந்த பிரேமா ரத்னா அவர்கள் “ அஷ்ரப் வைத்திய சாலையில்
கடமைபுரியும் நாங்கள் பாக்கிய சாலிகள் என்றே கூற வேண்டும். இங்கு எமக்கு
எந்த வித பார பட்சமும் காட்டாது எமக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும்
பெற்று தரப்பட்டுள்ளன. இங்குள்ள விடுதி வசதி , மற்றும் சிறந்த நூலக வசதி
போன்ற வற்றின் மூலம் நாம் மிகபெரிய பயனடைந்துள்ளோம். எமது
பதவியுயர்வுகளுக்காக நாம் பல பாட நெறிகளை கற்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்ட
போது இந்த நூலகம் மற்றும் விடுதிவசதிகள் எமக்கு பேருதவியாக இருந்தன,
ஆகவே இவ்வாறான சிறப்பாக இயங்கும் நிர்வாக
முறைகளை சீர்கெடுக்கும் வகையிலும் சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையிலும்
பௌத்த தீவிர வாத கருத்துக்களை அடிபபடைகளின்றி மக்கள் மத்தியில் கூறுவதால்
சமூகங்களுக்கு மத்தியிலுள்ள விரிசல்கள் மேலும் வலுவடையும். என்றும்
தெரிவித்தார். கூடத்திலிருந்த ஏனைய உறுப்பினர்களும் குறிப்பிட்ட இனவாத
கருத்துக்களுக்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளனர் .
வைத்திய சாலை நிர்வாகத்துடன் தொடர்பு பட்ட
இன்னும் சில வைத்தியர்களை நாடி இது பற்றி கேட்ட போது “ இலங்கையில் ஒரு
அரசியல் வாதியின் பெயரில் அஷ்ரப் வைத்திய சாலை மட்டும் தான் உள்ளது என்று
கூறுவது சுத்த மடத்தனமான பேச்சாகும். தம்புள்ளையில் உள்ள டென்சில்
கொப்பேகடுவ வைத்தியசாலை , பேராதெனிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக வைத்திய சாலை ,
பொறல்லையிலுள்ள லேடி ரிஜ்வே வைத்திய சாலை , கொழும்பு டி சொய்சா வைத்திய
சாலை , பாணதுரை கேதுமதி வைத்திய சாலை போன்றவையும் சமூகத்தலைவர்களின்
பெயர்களால் இன்றளவும் இயங்குவதை இவர்கள் அறியாதிருப்பதை, இவர்களின்
அறிவீனம் என்பதா, அல்லது மக்களை முட்டாள்களாக கருதிவிட்டார்களா என்றே
எண்ணத்தோன்றுகிறது.
மேலும் அக்காலத்தில் சாதாரண மருத்துவ
நிலையமாக (டிஸ்பென்சரி) இருந்த இவ்வைத்திய சாலையை பல சிரமங்களுக்கு
மத்தியில் அடிப்படை தேவைகளை பெற்று தந்து தரமுயர்துவதற்காக மர்ஹூம் அஷ்ரப்
அவர்கள் பெரும் பாடுபட்டார்கள், அக்காலத்தில் கிழக்கில் நிலவிய பயங்கர வாத
பிரச்சினைகளால் கல்முனை ஆதார வைத்திய சாலையின் பயன் பாட்டை பெறுவதில்
இப்பகுதி முஸ்லிம் சிங்கள மக்கள் பாரிய தடைகளை எதிர்கொண்டனர், கிழக்கு
பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள் கடத்தப் பட்டமை , புனித ஹஜ்ஜிக்கு சென்று
திரும்பிய ஹாஜிகளை கடத்தி சென்று கொன்றமை, போன்ற வன்முறைகளால் இப்பகுதி
மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டிருந்தார்கள் , இவ்வாறானதொரு பின்னணியில்
தான் இவ்வைத்திய சாலை முன்னேற்றப்பட்டது.
இவ்வைத்திய சாலைக்கான மர்ஹூம் அஷ்ரப்
அவர்களின் மகத்தான சேவைக்கான கௌரவிப்பாகவே அக்காலத்தில் சுகாதார அமைச்சராக
இருந்த டி பி தயா ரத்னா வினால் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு இவைத்திய
சாலைக்கு தலைவர் அஷ்ரபின் பெயர் சூட்டப்பட்டது , மர்ஹூம் அஷ்ரப் அவர்களின்
வேண்டுதல் படியோ அல்லது முஸ்லிம் காங்கிரசின் தேவைபடியோ மேற்படி பெயர்
சூட்டப் படவில்லை என்பதை புதிதாக இனவாதம் பேசும், வரலாறு தெரியாத இவர்கள்
இனிமேலாவது அறிந்து கொள்ளட்டும். என்றும் கருத்துக் கூறினார்,
குறிப்பு :-
இவ்வாறான வரலாற்று உண்மைகளுக்கு மாற்றமாக
கருத்து கூறும் இந்த பொது பல சேனா இனவாதிகளுக்கு எதிராக மேற்படி விடயங்களை
ஒரு ஊடக மாநாட்டின் மூலமாவது பதில்தர இதுவரை கிழக்கின் எந்தவொரு அரசியல்
வாதியோ சமூக தலைமைகளோ முன்வராதது முஸ்லிம் சமூகத்தின் தலைமைதுவ இடைவெளியை
கோடிட்டு காட்டுகின்றது.
குறிப்பிட்ட பதுளை கூட்டத்தின் போது ஞான
சார தேரரால் கூறப்பட்ட இன்னுமொரு விசக்கருத்தானது “ அம்பாறை
மாவட்டத்திலிருந்து கடந்த 2012 ஆம் ஆண்டில் 31 பேர் வைத்திய துறைக்கும்
பொறியியல் துறைக்கும் பல்கலை கழகங்களுக்கு தெரிவாகி உள்ளதாகவும் அதில் 27
பேர் முஸ்லிம்கள் என்றும் ஏனைய 2 பேர் சிங்களவர்கள் 2 பேர் தமிழர்கள்
என்றும் ஒரு புள்ளி விபரத்தை பகிரங்க மேடையில்முழங்கப் பட்டது.
இவ்விலக்குகளை அடைய அடிப்படைவாத முஸ்லிம்
ஆசிரியர்களும் பரீச்சை உத்தியோகத்தர்களும் முஸ்லிம் பரீச்சார்த்திகளுக்காக
பரீச்சை எழுதுவதாகவும் அல்லது அவர்களுக்கு உதவுவதாகவும் கூறி கடந்தாண்டு
(2012) இல் நடைபெற்ற க,பொ.த (உ /த) பரீச்சைகளை கொச்சை படுத்தியது
மட்டுமல்லாமல், பல்கலை கழக மானியக்குழு இதுவரை எந்தெந்த துறைக்கு எத்தனை
பேர் எடுபட்டுள்ளார்கள் என்று முடிவு செய்யுமுன் திட்ட வட்டமான தொரு
எண்ணிக்கையை தெரிவித்துள்ளார்.
நானறிந்த வரையில் அம்பாறை மாவட்டத்தில்
தற்போது நடைமுறையிலுள்ள கல்வி வலயங்களில் மஹா ஓயா , தெஹியத்த கண்டிய ,
அம்பார ஆகிய கல்வி வலயங்கள் 100 % தனி சிங்கள கல்வி வாலயங்கலாகும்.
அப்படியானால் இப்ப குதிகளிலிருந்தும் சிங்களவர்கள் தெரிவாகாததிட்கு
முஸ்லிம்கள் தான் காரணமா? ஆனால் தனி முஸ்லிம்கள் மட்டுமுள்ள கல்வி வலயங்கள்
எங்கும் இல்லை , தமிழ் மொழி பகுதிகளிலுள்ள பரீச்சை மண்டபங்களுக்கு
முஸ்லிம்களும் , தமிழர்களும் இணைந்தே பரீச்சை உத்தியோகத்தர்கள் கடமையில்
இருத்த படுவார்கள் , இரண்டே இரண்டு தமிழ் சகோதரர்கள் மாத்திரம் மேற்படி
விஞ்ஞான பொறியியல் துறைகளுக்கு தெரிவாகி உள்ளார்கள் என்றால் , அதற்கு
காரணம் முஸ்லிம் பரீசார்த்திகளுக்காக முஸ்லிம் உத்தியோகத்தர்கள் உதவி
செய்துள்ளார்கள் என்றால் தமிழ் பரீச்சை உத்தியோகத்தர்கள் பூப்பறிக்க
சென்றிருந்தார்களா ? முறையாக இவற்றை விளக்கம் தர கிழக்கின் பொறுப்புள்ள
துறை சார் தலைமைகள் முன்வராதா ?
Post a Comment