சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்திய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பலம்வாய்ந்த துடுப்பாட்டத்தைக் கொண்டுள்ள இந்திய அணியை வெற்றிகொள்வதற்கு 181 ஓட்டங்கள் போதுமானது அல்லவெனவும் அஞ்சலோ மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.
வீரர்களின் முதலாவது இலக்கான அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், தமது அணி வெட்கப்பட வேண்டிய ஓர் அணி அல்லவெனவும் அஞ்சலோ மெத்தியூஸ் கூறியுள்ளார்.
கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசூழற்சியை தாம் முக்கியமானதாக கருதிய போதிலும், அது சாதகமாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நேற்றைய போட்டியில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட லசித் மாலிங்க பிரகாசிக்க தவறியமை குறித்து அவர் எந்தவொரு விமர்சனத்தையும் வெளியிடவில்லை.
கார்டிப் மைதானத்தில் காணப்பட்ட வானிலை காரணமாக அவரின் பந்துவீச்சு சாதகமாக அமையவில்லை என இலங்கை அணித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment