Homeநாங்கள் சிறும்பான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவோம் - ஞானசார தேரர் சூளுரை
நாங்கள் சிறும்பான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவோம் - ஞானசார தேரர் சூளுரை
(லங்கா ஸ்ரீ நியூஸ் + தமிழில்- எ எம் எம் முஸம்மில்)
பொது பல சேனா மூலஸ்தானத்தில் இன்று
28-06-2013 நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது , "நாங்கள் சிறும்பான்மை
இனத்த்தவரின் மீது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தாக்குதல் நடத்துவோம். என
ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் இலங்கையில் செயற்படும்
சிறும்பான்மை குழுக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு மாத கால
அவகாசம் கொடுக்கின்றோம். அரசாங்கம் அடுத்து வரும் எசல போயா தினத்திற்கு
முன்பதாக இவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தவறினால் இக்குழுக்கள் மீது
தாக்குதல் நடத்துவோம். இந் நாட்டின் சிங்கள கிராமங்களுக்குள் ஊடுருவும்
மாற்று சமூக குழுக்களை விரட்டியடிக்க பெளத்த பாதுகாப்பு படையொன்றை
தோற்றுவிப்பதற்கான தேவையுடையவர்களாக உள்ளோம். என்றும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
Post a Comment