அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை அரசியலுக்குள் இழுப்பதற்கு ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எத்தனிப்பதாக அவர் வழங்கிய செவ்வி மூலமாக
விளங்குகின்றது. நாட்டில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ள 13 ஆம்
சீர்திருத்தத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை தலையிட வேண்டும் என
கோறுவது வேடிக்கையாகவே உள்ளது. அவ்வாறு அவர்கள் தலையிட வேண்டுமெனின்,
நீங்களும் உம்மை போன்றோரும் நாங்கள் தான் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள்
என கூறிக் கொண்டு எமது வாக்குகளை பெற்றுக் கொண்டு ஏன் பாராளுமன்றம் செல்ல
வேண்டும்?
ஹலால் விடயத்தில் மும்முரமாக செயற்பட்ட ஜம்மியதுல் உலமா 13 ஆம்
சீர்திருத்தத்தில் மௌனம் காத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் கூறுகிறார். ஆம் அது உண்மை தான். ஹலால் விடயம் என்பது அகில இலங்கை
ஜம்மியதுல் உலமாவினால் பொறுப்பேற்று செயற்படுத்தப்பட்ட ஒரு விடயம். அதனால்
ஹலால் சம்பந்தமான பிரச்சினை இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போது
அவர்கள் அப்பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
ஆனால் 13 ஆம் சீர்திருத்தத்த பிரச்சினாயில் முடிவு காண வேண்டியது அரசியல்
வாதிகளான உங்களை போன்றவர்களது பொறுப்பாக காணப்படுகிறது.
13 ஆம் சீர்திருத்தத்தில் ஏற்படுத்தவிருக்கும் மாற்றத்தில் சிறுபான்மை
சமுகம் பாதிக்கும் என்பதால் அது குறித்து குரல் கொடுக்கும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நன்றியுணர்வுடன் நினைவு கூறுகின்றேன். அதே
வேளை இதுபோன்று சிறுபான்மை சமுகத்தை பாதிக்கும் திவிநெகும திட்டத்திற்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு
வழங்கியதையும் ஞாபகப்படுத்துவது பொறுத்தமானது என நினைக்கிறேன். இது
இவ்வாறிருக்க தற்போது 13 ஆம் சீர்திருத்த விடயத்தில் ஜம்மியதுல் உலமாவையும்
இணைக்க விரும்புவது எந்த அளவு ஏற்றுக் கொள்ள முடியும்.
2000 ஆம் ஆண்டு வரை எம்மை பிரதிநிதித்துவப் படுத்திய தலைவர்கள் அகில இலங்கை
ஜம்மியதுல் உலமாவையோ அல்லது இதர சன்மார்க்க அமைப்புகளையோ அரசியலுக்குள்
இழுக்க வில்லை. மாறாக அவர்களிடம் தூர நோக்கு, அரசியல் சாணக்கியம் என்பன
காணப்பட்டன. இதனால் அவர்கள் முஸ்லிம் சமுகத்துக்கு அதன் உரிமைகளை பெற்றுக்
கொடுப்பதில் வெற்றியும் கண்டார்கள்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் எமது அரசியல்வாதிகளை மார்ரக்க
விழுமியங்களுக்குட்பட்டவாறு நெறிப்படுத்துவதோடு எமது சமுகம் முகங்
கொடுத்துள்ள சவால்களை வொன்றெடுக்க அவர்களை இணைத்துக்கொண்டு முயற்சிப்பது
காலத்தின் தேவையாகும்.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களே உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்
கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களது வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களே ! கண்டி நகர மக்களது சுமார் 150
வருடகால உரிமை ஒன்று(மாடறுக்கும் உரிமை) பறிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில்
இழக்கப்பட்ட உமக்கு வாக்களித்த அம்மக்களது உரிமையை பெற்றுக்கொடுக்க
உம்மாலான முயற்சிகளை எடுப்பீர்களா?.

Post a Comment