2009 இல் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட
ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூனுடன் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
வெளியிட்ட கூட்டறிக்கையில், 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தமிழ்
மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென
தெரிவிக்கப்பட்டிருந்தது., அதன் பின்னர் ஜனாதிபதி, வெளிவிவகார
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்து இதனை
வலியுறுத்தியதோடு ஐ.நா.மனித உரிமை மாநாட்டிலும் 13 பிளஸ் தீர்வை
வழங்குவோம் என்றும் அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியது என்று அவர்
தெரிவித்தார்.
ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறானதோர்
சூழ்நிலையிலேயே அரசுக்குள்ளிருக்கும் பங்காளிக் கட்சிகளான
ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்கரணவக்க தேசிய சுதந்திர முன்னணியின்
விமல் வீரவன்ச உட்பட பல சிங்கள பெளத்த அமைப்புக்கள் 13 க்கு எதிர்ப்பை
காட்டி வருகின்றன., மறுபுறம் ராஜித உட்பட இடதுசாரிகள் ஆதரவு
தெரிவிக்கின்றனர்.
13 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச,
சம்பிக்க ரணவக்க பதவிகளை தூக்கியெறிந்து வெளியே வரவேண்டும்.
அதேபோன்று அமைச்சர் ஹக்கீமும் வெளியேற வேண்டும். ஆனால் இதனை
செய்வதற்கு இவர்களுக்கு முதுகெலும்பில்லை. வெறுமனே மக்களை
ஏமாற்றுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கள பெளத்த மக்களிடையே இனவாதம் மதவாதத்தை தூண்டிவிட்டு
அரசியல் குளிர்காய முனைகின்றனர்., அத்தோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சித் தலைமையிலான அரசாங்கம் 13 ஆவது திருத்தம் தொடர்பில்
உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். அதை விடுத்து
அமைச்சர்களை பயன்படுத்தி நாடகங்களை அரங்கேற்றலாகாது எனவும்
குறிப்பிட்டார்.
தெரிவுக்குழு, இப்பிரச்சினையை ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழு
அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் எவ்விதமான தீர்வும் கிடைக்காது.
காலத்தைக் கடத்து வதற்காகவே தெரிவுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
8 மாகாணங்கள்,
8 மாகாணங்களில் மாகாண சபைகள் இயங்குகின்றன. அப்படியானால் ஏன்
வடக்கிற்கு அதனை வழங்குவதை எதிர்க்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment