கொழும்பு 7 பௌத்தாலோக அஸ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்ற
மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டித்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள ரஸ்ய துதரகத்தை அகலமாக்கும்
நோக்குடன் பழமைவாய்ந்த அப்பள்ளிவாசலை அகற்றுவதற்கு முயற்சி
மேற்கொள்ளப்படுவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியே இந்த கையெழுத்து
போராட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இப்பள்ளிவாசல் அகற்றப்படாது என உறுதியளிக்கப்பட்டிருந்த போதும் தற்போது மீண்டும் இப்பள்ளிவாசலை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் இப்பள்ளிவாசல் அகற்றப்படாது என உறுதியளிக்கப்பட்டிருந்த போதும் தற்போது மீண்டும் இப்பள்ளிவாசலை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment