Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மு.கா. பொதுபல சேனாவுக்கு எதிராக களமிறங்கியிருந்தால் அது கலவரமாக மாறியிருக்கும்

Wednesday, June 260 comments

அக்கரைப்பற்றில் இடம்பெறும் அபிவிருத்திகள் போன்று கல்முனையிலும் நடைபெறவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் அக்கரைப்பற்றில் அபிவிருத்திகள் நடைபெற வேண்டும் என்று அழுதிருக்கிறோம் ஏனென்றால் அபிவிருத்தியை தவிர மற்றைய எல்லாவற்றிலும் உடுத்திருந்த ஆடைகள் நொய்ய விட்டுவிட்டு அங்கு இருக்கின்ற அரசியல்வாதி இன்னும் சொல்லப்போனால் ஒரு விபச்சாரத்தைவிட மோசமான வேலையைத்தான் அக்கரைப்பற்றில் அரசியல் அதிகாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
கல்முனை அபிவிருத்திப் அபிவிருத்திப்பெருவிழாவில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்படி கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
 நம்மவர்கள் சொல்வார்கள் உம்மாவுடன் போகப்போகிறாயா? ஓம் ஓம், வாப்பாவுடன் போகப்போகிறாயா ஓம் ஓம் இப்படி அபிவிருத்திக்காக இந்த சமூகத்தை துண்டு துண்டாக வெட்டியளித்துத்தான் அல்லது முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டாலும் முஸ்லிம்களுடைய பள்ளி உடைக்கப்பட்டாலும், அவர்களுடைய மதச் சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எடுக்கின்ற அரசியல் அபிவிருத்திதான் இப்போது அக்கரைப்பற்றில் இருக்கின்ற அபிவிருத்தி, இது தேவையில்லை
அப்படி அக்கரைப்பற்றிலே நடக்கின்ற அபிவிருத்தி கல்முனை மண்ணுக்கும் வேண்டும் என்று தயவு செய்து நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் யாரும் நினைத்துவிடாதீர்கள். இன்றிருக்கின்ற அரசியல் சூழ் நிலை என்பது வேறு. அக்கரைப்பற்றில் இருக்கின்ற அரசியல் தலைமகனுக்கு பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பாக திவிநெகும, பிரதம நீதியரசர் விடயம், பொதுபலசேனா பிரச்சினை என்று பல வந்த போதும் ஆதரித்தார். இப்போது 13 திருத்தம் வந்த போதும் ஆதரித்தார். இந்த முஸ்லிம்களுக்கு விரோதமாக போகின்ற போக்கு  இந்த அரசியல் ஊடாக தலைமுறையில் ஏற்படுகின்ற மாற்றம் போராட்டத்தினுடைய வழிமுறைகள் நோக்கங்களை, இலட்சியங்களை மாற்றும். அக்கரைப்பற்றில் உள்ள அரசியல் வாதிக்கு இதைப்பற்றி பிரச்சினை இல்லை இலங்கைக்கு உள்ளே நடக்கின்ற அரசியல் பற்றியும், பொதுபலசேனாவுக்கு பின்னால்யார் இருக்கிறார்கள், இராவணா பலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் இதனுடைய பின்னணி என்ன? இதனுடைய நோக்கம் என்ன என்பது பற்றி அவருக்கு பிரச்சினை இல்லை. இலங்கையை சுற்றி நடக்கின்ற புவியியல்சார் அரசியலில் இந்தியா என்ன காய் நகர்த்துகிறது சீனா என்ன காய் நகர்த்துகிறது இதனை மேலாட அமெரிக்கா என்ன யோசனை செய்கிறது என்பது பற்றியும், அரசாங்கத்திற்குள்ளே உள்ள அமைச்சர்களாக இருப்பவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பது பற்றியும் அவர்கள் யோசிக்கத்தேவையில்லை ஏனென்றால் அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பௌத்த தேசிய வாதம் அதனுடைய கொடும் பிடியை அதன் கோரப்பல்லை காட்ட முனைகிறது இந்த தருணத்தில் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரைக்கும் இனத்தை வைத்துத்தான் தன்னுடைய தீர்மானத்தை எடுக்க முடியும் சீனா இலங்கையிலே அளவுக்கு அதிகமாக ஈடுபாடு கொண்டிருக்கிறது என்கின்ற காரணத்தினால் இப்போது அமெரிக்கா சீனாவை இந்த நாட்டிலே கையை விட்டு இழுத்துவிட வேண்டும் என்பதற்காக சீனாவினுடைய துறைமுகங்கள் இலங்கையிலும் ஏனைய இரண்டு நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளது. இதனூடாக இலங்கையில் சீனாவினுடைய இறுக்கம் இன்னும் அதிகரிக்கும் அப்படி அதிகரிக்கின்ற போது அது எவ்வாறு முஸ்லிம் சமூகத்தை பாதிக்கப்போகிறது என்பதனை முஸ்லிம் சமுகத்தினுடைய தலைமைகள் யோசிக்கவேண்டும். அதாஉல்லா, றிசாட் போன்றோர் யோசிக்கவேண்டியதில்லை ஏன் அமைச்சரவையில் இருக்கின்ற இப்போது இனவாதம் பேசுகின்ற அமைச்சர்கள் ஏதாவதொரு இடத்தில் செவியேற பேசுகின்ற பேச்சுக்களை பிரித்துப் பார்க்கவேண்டிய தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கிறது. 
பொதுபல சோனாவுடைய ஒவ்வொரு நகர்விலும் இதற்கு பின் யார் இருக்கிறார்கள் இதனுடைய நோக்கம் என்ன என்பதனை பற்றி தீர விசாரித்துப் பார்க்க வேண்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குத்தான் இருக்கிறது. அதனூடாகத்தான் முஸ்லிம் சமுகத்தை ஸ்தீரமாக வைத்திருக்க முடியும். பொது பலசேனாவுக்கு எதிராக ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மௌனம் காக்கின்றது என்று கேட்டார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுபல சேனாவுக்கு எதிராக ஆரம்பத்தில் களமிறங்கியிருந்தால் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் பேசுகின்ற போது சிங்களவர்கள் எல்லோரும் சிங்கள பௌத்தவாதம் கடும் போக்குவாதிகளோடு இணைந்திருப்பார்கள் அப்போது அது முஸ்லிம், தமிழ், சிங்கள கலவரமாக மாறியிருக்கும் ஆகவே முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற அளவிற்கு சிங்கள தலைமைகள் தயாராகின்ற சூழ் நிலையை பார்த்துக்கொண்டிருந்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை.
அதற்கு பிறகு சிங்கள சமுகத்தில் இருந்த இடதுசாரிகள் கதைக்கத்தொடங்கினார்கள், மென் போக்குவாதிகள் கதைக்கத் தொடங்கினார்கள் அப்படி முஸ்லிம்களுக்காக சிங்கள தலைமைகள் பேச ஆரம்பிக்கின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை அதனை தன்னுடைய பலமாக ஸ்திரப் பயன்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தது. பொதுபலசேனா முதுகு முள் முறிந்து உடைந்ததைப்போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கவேண்டும். 
அதுமாத்திரமல்ல 13வது சரத்தினுடைய திருத்தங்கள் தொடர்பாக இப்போது பேசப்படுகிறது சிறுபான்மையினர்களுடைய தலைவர்களாக அமைச்சர்களாக அரசாங்கத்திற்குள்ளே இருப்பவர்கள் 5பேர்தான் ஆனால் ஒரே ஒரு முஸ்லிம் சிறுபான்மையினத்தினுடைய தலைவர் அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் மாத்திரம்தான் 13வது சரத்தில் கைவைக்க விட மாட்டோம் என்று உறுதியாகச் சொன்னார். அதாஉல்லா ஒட்டு மொத்தத்தில் 13யை ஒழித்துவிட வேண்டும் என்று சொன்னார். றிசாட் ஊமையாக இருந்தார், டக்ளஸ் வராமல் விட்டார், ஆறுமுகம் தொண்டமான் இருந்தும் தெரியாது இல்லாததும் தெரியாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைதான் சிறு பான்மைக்காக பேசியது. முஸ்லிம் காங்கிரஸ் பேசாது விட்டிருந்தால் இடது சாரிகள் என்று கூறுபவர்கள் டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் தைரியமாக தனித்து நின்று பேசியிருக்கமாட்டார்கள் ராஜித பேசியிருக்கமாட்டார். ஆனால் இது சிறு பான்மைக்கு செய்கின்ற அநீதி என்பதனை பேசியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் அவர்கள் எல்லோருமே களமிறங்கினார்கள் நமது தலைமைக்கு பக்கபலம் சேர்க்கின்ற அளவிற்கு பேசினார்கள். 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தைவிட்டு வெளியேறும்வரை அல்ல வெளியிறக்கும்வரை இருக்கவேண்டும். வெளியிறங்கிவந்து முஸ்லிம்களுக்காக நாங்கள் பேசுகின்ற போது எங்களை தூக்கி எறிந்தார்கள் என்று சொல்லும் வரைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கவேண்டும் இவ்வாறு இதற்கான காரணங்களை ஏற்கனவே கூறிவந்தேன் அதற்கு என்னை விமர்சித்தார்கள் அல்லாஹ்வின் உதவியால் அதில் இருந்து ஒரு மாதத்தின் பின்னர் அதே அமைச்சரவையில் நமது தலைவர் இருந்தமையால்தான் 13வது சரத்தை எதிர்த்து பேசமுடிந்தது. இப்படி சரியான நேரம் பார்த்து காலம் பார்த்து தீர்மானம் எடுக்கின்ற அதற்காக பேசுகின்ற அமைப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. சிலர் பேசுகிறார்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் முஸ்லிம்களுடைய அதிகப் பெரும்பாண்மையோடு பாராளுமன்றத்தில் அரசியல் அதிகாரத்தில் இருக்கின்றது என்கின்ற செய்தி ஒன்றே போதும், இக் கட்சியின் இருப்பு மாத்திரமே போதும் வேறு ஒன்றும் செய்யத்தேவையில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மேலும் கூறினார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by