மாடு அறுப்பதைத் தடை செய்ய வேண்டியும் மத மாற்றத்தைத் தவிர்க்கும் சட்ட
மூலத்தைக் கொண்டு வர வேண்டியும் கோரி சிங்கள ராவய அமைப்பினர்
கதிர்காமத்திலிருந்து ஜனாதிபதியின் அலரி மாளிகை வரையிலான பாதயாத்திரையின்
இறுதிக் கட்டமாக இன்று 2013.06.26 ஆம் திகதி புதன்கிழமை 12.30 மணியளவில்
கொள்ளுப்பிட்டிச் சந்தியை வந்தடைந்தனர்.
இவர்கள் காலிமுக வீதி வழியாக தேசியக் கொடி மற்றும் பெளத்தக் கொடிகளை
ஏந்தியவாறு “மாடு அறுப்பதைத் தடை செய்”, “மாடு அறுப்பவர்களை நாடு கடத்து”, “
நாட்டைப் பிரிப்பதற்கு விரும்பாதே” என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறு
ஜனாதிபதியின் அலரி மாளிகையை நோக்கிச் செல்ல முற்பட்டபோது கொள்ளுப்பிட்டிச்
சந்தியில் வைத்து பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டு லிபர்ட்டி பிளாஸா
வீதியாக அனுப்பப்பட்டனர்.



Post a Comment