நாட்டில் கணிசமாக அதிகரித்துவரும் கசினோ சூதாட்ட நிலையங்கள், மதுபானக்
கடைகள், புக்கிகள் எதிர்கால சந்ததிகளின் ஒழுக்க விழுமியங்களை பாதிக்கும்
என்பதால் இவை முற்றுமுழுதாக தடைசெய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு தெரிவிக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்
குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
சகல சமயங்களிலும் தடுக்கப்பட்டுள்ள இப்பாவச் செயல்கள் சமய ஒழுக்கங்களை
பாரிய அளவு பாதிப்பதால் இவை எக்காலத்திலும் அனுமதிக்கப்பட முடியாதவையாகும்.
சுபீட்சமான வாழ்க்கையை எதிர்தபார்க்கும் ஒவ்வொரு நாட்டுப் பிரஜையும்
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதிக்கும் இவ்வாறான செயல்களை எதிர்க்க
கடமைப்பட்டுள்ளார்கள்.
எனவே அனைத்து சமயங்களையும் மதித்து செயற்படும் இச்சுதந்திர இலங்கையில்
இவ்வாறான பாவகாரியங்கள் தடுக்கப்படுவதன் மூலமே பண்பாடுள்ள ஒரு சமூகத்தை
கட்டியெழுப்ப முடியும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
பொறுப்பானவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.
அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Post a Comment