தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர பிரதி
முதல்வருமான ஆஸாத் சாலி தனது விடுதலைக்காக ஒத்துழைப்பு வழங்கிய கிழக்கு
வாழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கு முகமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை
மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று சாய்ந்தமருது சீ பிரீஸ்
ரெஸ்டோரன்டில் எம்.நளீம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
சட்டத்தரணி சுமேந்திரன், லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி
விக்கிரமபாகு கருணாரட்ன மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள்
என பலர் கலந்து கொண்டனர்.
அங்கு ஆஸாத் சாலி உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எங்கு அநீதி
இழைக்கப்படுகின்றதோ அங்கு எனது குரல் ஒலிக்கும் எனவும் அரசின்
அராஜகத்திற்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment