
கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பு
உறுப்பினர்கள் அனைவரையும் கொழும்புக்கு உடனடியாக வருகை தருமாறு
பணிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் காத்தான்குடி
இன்போவிற்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர்,
அமைச்சர்கள் மற்றும் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மாளிகையில்
பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதியுடன் நடைபெறும் விசேட கூட்டத்தில்
கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த
கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றி உறுதிப்படுத்த முடியவில்லை, இருந்த
போதும் அண்மைக்காலமாக ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கிடையே பலத்த கருத்து
வேறுபாடு நிலவி வருவதும், உள்வீட்டு குத்துவெட்டு நடைபெறுவதும் பல
ஊடகங்களில் சிலாகித்து பேசப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பாக
ஆராய்வதற்காகவே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கலாம் என்று
நம்பப்படுகிறது.
Post a Comment