வட மாகாணத்தில் முஸ்லீம்கள் மீளக்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை என
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்
சித்தார்த்தன் தெரிவித்தார்.
இன்று மாலை இராசாவின் தோட்டத்தில் அமைந்துள்ள யாழ் ஊடக மையத்தில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1990 ஆண்டு கால பகுதியில் சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய முஸ்லீம்கள்
இன்று வட பகுதிகளில் குடியமர்ந்து வருகின்றனர். இதனை பலரும் சந்தேகக்
கண்கொண்டு பார்க்கின்றனர்.
தமிழின குடிப்பரம்பலை சீர்குலைப்பதாக இவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கை
அமைந்துள்ளதாகக விமர்சிக்கின்றனர். இது தவிர்க்கப்படவேண்டும்.
எமக்கு எப்படி சொந்த காணிகள் தேவையோ அது போன்று தான் அவர்களுக்கும் தேவைகள் உள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
.
Post a Comment