ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அதனருகிலுள்ள கட்டிடங்கள் தொடர்பில் பல்வேறு
வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவை மீறப்பட்டுள்தாக பிரதேச
முக்கியஸ்தர்கள் முஸ்லிம் அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
முஸ்லிம்கள் தரப்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்னரே ஜெய்லானி
பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மௌலவி தங்கும் இடம் உள்ளிட்ட மற்றும் சில
பகுதிகள் புல்டோசர் மூலம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச முஸ்லிம்கள்
கவலை வெளியிட்டுள்ளனர். இடித்துத் தள்ளப்படும் வேகத்தை நோக்குகையில் தாம்
அச்சமடைந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம்
தரப்புக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தபோதும்
ஜெய்லானி பள்ளிவாசலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்லேயே சகல செயற்பாடுகளும்
முன்னெடுக்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதற்கு
எதிர்மாற்றமாகவே அங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதேச முஸ்லிம்கள்
முஸ்லிம் அமைப்புக்களுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
Post a Comment