
முஸ்லிம்கள் ஜக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதில் எவ்வித பிரயோசனமும் கிடையாது. ஏனெனில் அவர்கள்
ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்றப் போவதில்லை, கைப்பற்றவும் முடியாது என்று நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் தெல்தோட்டையில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐ.தே.க ஆட்சி பீடம் ஏற வேண்டுமெனில் பெரும்பான்மை சிங்களவரகளது வாக்குகள் மிக அவசியமாகும். ஆனால் ஐ.தே,க அதற்கான எவ்வித பிரயத்தனத்தையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. எல்லாத் தேர்தல் முடிவுகளையும் பார்க்கும் போதும் ஜனாதிபதியே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லக்கூடிய நிலைமையை கண்கூடாக பார்க்கிறோம்.
நிலைமை இவ்வாறிருக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலக வேண்டும், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் அரங்கேற்றுகின்றன எனவே உடனே அரசை விட்டு வெளியேறு என்று சிலர் இலேசாக கூறிவிட்டுச்செல்கின்றனர்.
அவ்வாறு வெளியேறி சாதிக்கப் போவது எதுவும் கிடையாது. அரசாங்கதிதின் உள்ளே இருப்பதால் முஸ்லிம் சமுகத்திற்கு செய்யக்கூடிய ஓரிரு விடயங்ளையாவது செய்ய முடியும். ஓரிரு அமைச்சர்களை கூட்டிக்கொள்ள முடிவதோடு மக்களுக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்கலாம்.
நாம் அரசாங்கத்தில் இருந்து கொண்டு தனித்து போட்டியிடுகிறோம் இதன் உள்நோக்கம் எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதே தவிர வேறொன்றுமில்லை. ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து முஸ்லிம் பிரதிநிதிகளை உள் அனுப்புவதானது ஜனாதிபதியின் கோபத்தை சம்பாதிப்பதற்கான வழிமுறையாகவே அமையும்.
அதேநேரம் வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கும் போது அது அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கும் கட்சி என்ற அடிப்படையில், அவ்வாக்குகளை வைத்துக் கொண்டு ஜனாதிபதியிடம் ஒரு செய்தியை கொண்டு சொல்ல முடியும். முஸ்லிம் காங்கிரஸ்ன் கோரிக்கைக்கு செவிசாயத்தால் எமது ஆதரவை கொண்டு செல்லலாம், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் ஏற்படும் போது முஸ்லம் காங்கிரஸின் சொல் எடுபடக்கூடிய நிலைமை உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்
Post a Comment