
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ ஏற்பாடு செய்திருந்த
இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை, 1 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
இதில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா பங்கேற்றுள்ளார். முஸ்லிம்
அரசியல்வாதிகள் வரிசையில் கோத்தாவின் இப்தார் நிகழ்வில் பங்கேற்ற ஒரேயொரு
முஸ்லிம் அரசியல்வாதி பைஸர் முஸ்தபா மாத்திரமேயாகும்.
நிகழ்வில் பங்கேற்ற முஸ்லிம் பிரதிநிதியொருவர் இதனை சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா அல்லது
அழைப்பு விடுக்கப்பட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோத்தாவின் இப்தாரில்
பங்கேற்கவில்லையா என்பது தெரியாதபோதும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ஏற்பாடு செய்த இந்த இப்தார் நிகழ்வு ஒரு ஆரோக்கியமான விவகாரம் என மற்றுமொரு
முஸ்லிம் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.
Post a Comment