
கொழும்பில் நேற்றுமாலை இடம்பெற்ற சி.ஏ. சந்திரபிறேம எழுதிய, 'கோத்தாவின் போர்' என்ற ஆங்கில நூலின், சிங்கள மொழிபெயர்ப்பான 'கோத்தாபயகே யுத்தய' என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் தலைமையின் கீழும், கோத்தாபய ராஜபக்சவின் முயற்சியினாலும் தான் வெற்றி கிடைத்தது.
கடந்தகாலத் தலைமைகள் பலவீனப்பட்டு, தோல்வியை சந்தித்த நிலையில் தான், சிறந்த தலைமைத்துவம் மூலம் கோத்தாபய ராஜபக்ச இதனை சாதித்துள்ளார் என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1990களில் பல்வேறு நாடுகள் மற்றும் வெளிப்புற சக்திகளின் தலையீடுகளால், போரின் போது ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்தும் இந்த நூல் விபரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச, படைத்தளபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
எனினும் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பசில் ராஜபக்சவோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ இந்த நிகழ்வில் பங்கேற்காது நிகழ்வைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் வெற்றியை தனதாக்க்கிக் கொள்ள்ளும் கோத்தாபய ராஜபக்சவின் முயற்ச்சியை எதிர்த்தே இன் நிகழ்வைப் புறக்கணித்ததாக அவதானிகள் கருத்து தெரிவித்தனர்
Post a Comment