என்னதான் எங்களுக்கு மரியாதை
தரவில்லையென்றாலும், தெரிவுக்குழுவில் எம்மைச் சேர்க்கவில்லையாகினும்,
கூட்டணி அரசிலிருந்து நாங்களாக விலகமாட்டோம், ஜனாதிபதி விரும்பினால் எம்மை
விலக்கட்டும் என்று கூறுகிறார் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்
ஹஸன் அலி.
அதேவேளை, 13ம் திருத்தச்சட்டத்தினை
நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த இரண்டு உறுப்பினர்கள், ரிஸ்வி ஜவஹர்ஷா
மற்றும் எஹியா ஆப்தீன் ஆகியோர் நீக்கப்பட்டமை குறித்து கருத்து
வெளியிடுகையில் அவர்களை கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹகீமே
நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment