தொடராக 25 வருட காலத்துக்கும் மேலாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13
ஆவது திருத்தத்தை விடவும் கூடுதலான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட
வேண்டும் என்றே வலியுறுத்தி வந்துள்ளது. இந்த அதிகாரங்கள் பறிபோகின்றபோது
அதனை நிச்சயம் தெரிவிப்போம். விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என
நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கும் முயற்சிகள் தொடர்பில் வினவியபோதே
அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்துத்
தெரிவிக்கையில்,
இந்த விடயத்தில் எமது கட்சியும் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும்
மாகாணசபை உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்படுவார்கள். ஒருசில தீவிரவாத
சக்திகளின்அழுத்தத்திற்குஅரசிடம் பணிந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய
தேவை இருக்கிறது.
13 ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்துவதற்கு துணை போகாமலிருப்பதாக பேராளர்
மாநாட்டில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுவிட்டது. இத்தீர்மானம் பாராளுமன்ற
உறுப்பினர்களை கட்டுப்படுத்தியுள்ளது. இத் தீர்மானத்தை மாற்றுவதென்றால்
இன்னுமோர் பேராளர் மாநாட்டின் மூலமே இயலும். கட்சியின் முன்மொழிவுகள்
அமைச்சரவையிடம் கையளிக்கப்பட்டுவிட்டன என்றார்.
இதேவேளை, 13 ஆவது திருத்தத்தை நீக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பினை
வெளியிடும் பிரேரணையொன்றினை கிழக்கு மாகாண சபையில் கொண்டுவர முஸ்லிம்
காங்கிரஸ் தீர்மானித்துள்து. இது தொடர்பாக கட்சியின் தலைவர் கிழக்கு மாகாண
சபையின் முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களுடனும் உறுப்பிகனர்களுடனும்
பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட பிரேரணை கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்டு
நிறைவேற்றப்பட்டால் 13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின்
முயற்சிகளுக்கு பெரிதும் பாதிப்பாக அமையுமென அரசியல் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

Post a Comment