நாளை நடைபெறவிருக்கும் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவ வாசிகசாலை
திறப்பு விழா கோலாகலமாக திட்டமிட்டபடி நடைபெறும் என கல்முனை மாநகர முதல்வர்
கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்;.
கல்முனை மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மீனவ
வாசிகசாலைக்கு தனிநபர் ஒருவரின் பெயர் வைப்பதையோ, அதற்காக விழா எடுப்பதையோ
நிறுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதம்
சம்பந்தமாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு முதலமைச்சரிடமோ அல்லது முதலமைச்சரின் செயலாளரிடமோ இருந்து நாளை
நடைபெறவிருக்கும் வாசிகசாலை திறப்பு விழாவினை நிறுத்துமாறு கடிதம் எதுவும்
கிடைக்கவில்லை.
மேற்படி வாசிகசாலை திறப்பு விழா எமது கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான
அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதில் எவ்வித
மாற்றமும் இல்லை என மேலும் தெரிவித்தார்.

Post a Comment