
ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள்
இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள்
உண்டு' என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை
தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் தன்னை விரும்பிய
இடங்களுக்கு செல்வதற்கு அனுமதியளித்தது எனவும் இலங்கை ஓர் எதேச்சதிகார
அரசுக்கான சில அறிகுறிகளை காட்டியது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான தனது விஜயத்தை
முடித்துக்கொண்டு இன்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில்
ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
'யுத்தத்தின் முடிவு ஒரு புதிய துடிப்பான
சகலரையும் அனைத்துபோகும் அரசொன்றை உருவாக்க வாய்ப்பை வழங்கிய போதும்
இலங்கையில் எதேச்;சதிகாரவழியில் செல்வதற்கான அடையாளங்களை காணமுடிகின்றது'
என அவர் கூறினார்.
.
' பயம் காரணமாக சுயத்தணிக்கை
காணப்படுவதாகவும் தாம் எழுதப்பயப்பிடுகின்ற அல்லது பத்திரிக்கை ஆசிரியர்
வெளியிடதுணியாத கட்டுரைகள் உள்ளனவென ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
சார்க் நாடுகள் பலவற்றில் உள்ளது போன்று
இலங்கையிலும் 'தகவல்பெறுவதற்கான உரிமை சட்டத்தை' கொண்டுவரவேண்டுமென நான்
கூறியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
ஒரு இராஜதந்திர ரீதியான உப்புச்சப்பற்ற
அறிக்கை தருவாரென கூறியோருக்கும், அதே பழைய அறிக்கையை தருவாரென கூறிய சில
அமைச்சர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆணையாளர் நவீபிள்ளே தான்
இங்கிருந்தபோது தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதை உறுதிசெய்தார்.
உலகின் எப்பகுதியிலும் தான் இதுவரை மேற்கொண்ட விஜயங்களில் இதுவே ஆகக்கூடிய நாட்களை கொண்டிருந்தது என அவர் கூறினார்.
' இப்போது எனது விஜயத்தின் மிகவும்
கவலைதரும் அம்சங்கள் பற்றி கூறவிரும்புகின்றேன். குறிப்பாக இரண்டு
மதகுருமார்கள், பத்திரிகையாளர்கள் உட்பட மனித உரிமைகளுக்காக
போராடுபவர்களும் சாதாண பிரசைகளும் என்னை சந்தித்தமைக்;காக அல்லது சந்திக்க
விரும்பியதற்காக மிரட்டப்பட்டனர் அல்லது துன்புறுத்தலுக்கு
ஆளாகினர்.இவைப்பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன' என அவர் கூறினார்.
மேலும், தன்னை சந்தித்த மனித உரிமை
ஆர்வலர்கள் மற்றும் மதகுருமார்கள் மீது கடும் கண்காணிப்பு இருந்ததாக
கிடைத்த செய்திகளால் தான் கவலையடைந்ததாகவும் அவர் கூறினார்.
பொலிஸின் நடவடிக்கைகள் '
அதிவிசேடமானதாகவும் மிதமிஞ்சியதாகவும்'இருந்தன எனவும் யுத்தம் முடிந்த
நாடுகளில் தான் இப்படி எங்கும் காணவில்லை என்றும் அவர் கூறினார்.
' நான் முல்லைத்தீவுக்கு போவதற்கு
முன்னரும் போய்வந்தததன் பின்னரும் இராணுவமும் பொலிஸாரும் அப்பகுதி மக்களை
சந்தித்தனர். திருகோணமலையில் நான் சந்தித்த மக்களிடம் நாம் என்னபேசினோம் என
விசாரிக்கப்பட்டுள்ளது' என பிள்ளே தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பாக தான் கடுமையாக கவனிக்கப்போவதாக அவர் கூறினார்.
மனித உரிமை பிரச்சினைகளை 27 வருட யுத்தகால
பிரச்சினைகள் எனவும் முழுநாட்டினது பிரச்சினைகள் எனவும் ஆணையாளர் பிள்ளே
பிரித்துக்காட்டியுள்ளார்.
வெலிவேரிய சம்பவம், வடக்கை
இராணுவமயப்படுத்தல், வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் பல மனித உரிமை
பிரச்சினைகள் பற்றியும் அவர் பேசினார்.
இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை
விசாரிக்க நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் செயலிழந்து போனதன் பின்னணியில்
ஆணைக்குழுக்கள் மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் மக்கள் நம்பிக்கை
இழந்துவிடுவர் என அவர் கூறினார்.
' ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என அவர் கூறினார்.
Post a Comment