'நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவர மிகவும்
பொருத்தமானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ' என முன்னாள் கொழும்பு பிரதி மேயர்
அசாத்சாலி கூறினார்.
இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்,
'ஒற்றுமையாக வாழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் வெவ்வேறு சமயங்கள், இனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
தனது குடும்ப அங்கத்தவரிடையே சமாதானத்தை பேணிவருவதுபோல நாட்டிலும்
சமாதானத்தை ஜனாதிபதியால் இலகுவாக ஏற்படுத்த முடியும்' என்று கூறினார்.
இதேவேளை, தன்னை சிறையிலிருந்து மீட்க பங்களிப்பு செய்த அரசாங்க
அமைச்சர்கள், பலநாடுகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோருக்கு நன்றியை
தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.
தான் ஒரு உள்ளூராட்சிமன்ற உறுப்பினராககூட இல்லாதபோதும் தனது விடுதலைக்காக பலர் உழைத்ததை அவர் இதன்போது நன்றியோடு நினைவுகூர்ந்தார்.
'நான் ஒரு வீரன்; எப்போதும் வீரனாகவே இருப்பேன்' என்றும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment