ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பங்குபற்றுதலின்றி நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியுடனான இராபோசன விருந்தில் கலந்துகொள்வதற்காக சென்றமையினால் முகா உயர்பீட கூட்டத்தில் தலைவர் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற கூட்டம், ஒரு மணித்தியாலம் நீடித்ததாகவும், மேல்மாகாணசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்களின் செய்தி தெரிவிக்கிறது. மேலதிக விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மீண்டும் நாளை (07) காலை கட்சியின் உயர்பீடம் கூடவுள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
Post a Comment