தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான அஸாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து இன்று அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன்காரணமாக வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு பாடசாலைகளிலும் மாணவர்களின் வரவு குறைவாகக் காணப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ,சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நிந்தவூர், மருதமுனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ,பாலமுனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இருப்பினும் வழமைபோன்று போக்குவரத்து இடம்பெறுகிறது. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment